சீனக்குடா கிராம அலுவலர் பிரிவு
229A இலக்கம் உடைய சீனக்குடா கிராம அலுவலர் பிரிவு (Chinabay) திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 525 குடும்பத்தைச் சேர்ந்த 2102 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர்.
முன்னர் சீனநாட்டவர் கடல் வாணிபத்தின் பொருட்டு திருகோணமலையில் இப்பகுதியில் குடியேறியதாலேயே இப்பகுதியானது சீனக்குடா என்றழைக்கப்படுகின்றது. இன்றும் சீனர்களின் வழித்தொன்றல்கள் இங்கு உள்ளபோதும் பெரும்பாலானவர்கள் இலங்கையர்களுடன் திருமணம் செய்து இலங்கையர்கள் ஆகிவிட்டார்கள்.
பிரிவினர் | எண்ணிக்கை |
---|---|
ஆண் | 1062 |
பெண் | 1040 |
18 வயதிற்குக் கீழ் | 729 |
18 வயதும் 18 வயதிற்கு மேல் | 1373 |
பௌத்தர் | 1100 |
இந்து | 617 |
இசுலாமியர் | 175 |
கிறீஸ்தவர் | 210 |
ஏனைய மதத்தவர் | 0 |
சிங்களவர் | 1215 |
தமிழர் | 687 |
முஸ்லிம் | 175 |
ஏனையோர் | 25 |
கைத்தொழில் வலையம்
[தொகு]இலங்கையின் மிக முக்கியமான ஒரு கைத்தொழில் வலையம் இங்கே அமைந்துள்ளது. முழு நாட்டிற்கும் கோதுமைமாவை அரைத்து வழங்கும் பிரீமா நிறுவனத்தின் மாவாலை இங்கேயே அமைந்துள்ளது. அத்துடன் டோக்கியோ சீமெந்து எனும் சீமெந்து நிறுவனமும் தனது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆலையை சீனக் குடாவிலே வைத்துள்ளது.
கைத் தொழில் வேலைகளுக்கு ஆதரவளிக்குமுகமாக திருமலை மாவட்டத்தின் ஒரே விமான நிலையமும் இங்கேயே அமைந்துள்ளது. அத்துடன் இந்தப் பிரதேசம் துறைமுக வசதியையும் கொண்டுள்ளுது. இதன் மூலம் தொழில் பேட்டைக்கு ஆகாயம் மற்றும் கடல் மூலம் பண்டங்களைத் தருவிக்க கூடியதாகவுள்ளது.
உசாத்துணைகள்
[தொகு]- திருகோணமலை மாவட்டப் புள்ளிவிபரம், திருகோணமலைக் கச்சேரி 2006. (ஆங்கில மொழியில்)
திருகோணமலை பட்டினமும் சூழலும் கிராம அலுவலர் பிரிவுகள் |
---|
அபயபுர | அரசடி | அருணகிரிநகர் | அன்புவெளிபுரம் | ஆண்டான்குளம் | இலுப்பைக்குளம் | உப்புவெளி | உவர்மலை | கப்பல்துறை | கன்னியா| காவத்திக்குடா | கோவிலடி | சல்லி | சாம்பல்தீவு | சிங்கபுர | சிவபுரி | சீனக்குடா| சுமேதங்காராபுர | செல்வநாயகபுரம் | சோனகவாடி கிராம அலுவலர் பிரிவு | திருக்கடலூர் | தில்லைநகர் | நாச்சிக்குடா | பட்டனத்தெரு | பாலயூத்து | பீலியடி | புளியங்குளம் | பூம்புகார் | பெருந்தெரு | மட்டிக்களி | மனையாவெளி | மாங்காயூத்து | முத்துநகர் | முருகாபுரி் | லிங்கநகர் | வரோதயநகர் | வில்கம | வில்லூன்றி | வெல்வெறி | வெள்ளைமணல் | ஜின்னாநகர் |