தியோடர் தாம்சன் பிளைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தியோடர் தாம்சன் பிளைன் (Theodore Thomson Flynn) ஓர் ஆத்திரேலிய கடல் உயிரியலாளர் ஆவார். இவர் 1883 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். தாசுமேனியா, ஐக்கிய இராச்சியம் இரண்டு இடங்களிலும் இவர் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் இருக்கும் கொராகியில் யெசி பி. மற்றும் யான் பிளைன் ஆகியோருக்கு மகனாக பிளைன் பிறந்தார். [1] 1909 ஆம் ஆண்டில் பிளைன் தாசுமானியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் விரிவுரையாளராக பணியாற்றினார். 1911 ஆம் ஆண்டில் இவர் பேராசிரியரானார், 1930 ஆம் ஆண்டு வரை அங்கு கற்பித்தார். [2] 1909 ஆம் ஆண்டு சனவரி மாதம் 23 அன்று லில்லி மேரி யங்கை மணந்தார். [3] பின்னர் வடக்கு அயர்லாந்திற்கு குடிபெயர்ந்த பிளைன் அங்கு குயின்சு பெல்ஃபாசுட் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் தலைவராக 1931 ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். பெல்ஃபாசுட் திடீர் தாக்குதலுக்குப் பின்னர் பிளைன் அந்நகரின் தலைமை விபத்து அதிகாரியாக இருந்தார். [4] திரைப்பட நடிகர் எரோல் பிளைன் இவரது மகன் ஆவார். தான் கண்டுபிடித்த புதிய இனத்திற்கு தன் மகனின் பெயரான எரோல் பிளைன் நினைவாக கிப்போன்சியா எரோலி எனப் பெயரிட்டார் . தியோடர் பிளைன் இங்கிலாந்தின் ஆம்ப்சயரில் உள்ள லிசுவில் 1968 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் நாள் காலமானார் . [5].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Biography of Theodore Thomson Flynn". University of Tasmania. 29 January 2013. பார்க்கப்பட்ட நாள் April 14, 2015.
  2. "Theodore Thomson Flynn profile". Biographical Entry. Encyclopedia of Australian Science. 2010. பார்க்கப்பட்ட நாள் April 14, 2015.
  3. Profile, Australian Dictionary of Biography; accessed 26 January 2017.
  4. Professor T.T. Flynn with his wife பரணிடப்பட்டது 2006-05-29 at the வந்தவழி இயந்திரம், multitext.ucc.ie; accessed 26 January 2017.
  5. Centre, The University of Melbourne eScholarship Research. "Flynn, Theodore Thomson - Biographical entry - Encyclopedia of Australian Science". www.eoas.info (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-26.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோடர்_தாம்சன்_பிளைன்&oldid=2986435" இலிருந்து மீள்விக்கப்பட்டது