தியோக்
தியோக் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 31°07′N 77°21′E / 31.12°N 77.35°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | சிம்லா |
அரசு | |
• சட்டமன்ற உறுப்பினர் | இராகேஷ் சின்கா |
ஏற்றம் | 2,310 m (7,580 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 4,353 |
Languages | |
• Official | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 171201 |
தொலைபேசி இணைப்பு | 91 1783 xxxxxx |
வாகனப் பதிவு | HP-09 |
தியோக் ( Theog ) என்பது இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் சிம்லா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி குழுவாகும். இதன் முதல் குடியேற்றங்கள் 1902 இல் இருந்தன.[1]
மக்கள்தொகை
[தொகு]2001ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ,[2] தியோக்கின் மக்கள் தொகை 3,754 பேர் என்ற அள்வில் இருந்தது. ஆண்களில் 57 சதவீத மக்களும், பெண்களில் 43 சதவீத பேரும் உள்ளனர். தியோக்கின் சராசரி கல்வியறிவு விகிதம் 64 சதவீதமாகும். இது தேசிய சராசரியான 59.5 சதவீதத்தை விட அதிகமாகும்: ஆண்கள் கல்வியறிவு 73 சதவீதமும், மற்றும் பெண்கள் கல்வியறிவு 56 சதவீதமும் ஆகும். தியோக்கில், 12 சதவீத மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 1931ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தியோக்க்கின் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 6912 ஆக இருந்தது. 1931இல் தியோக் மாநிலத்தில் 6800 இந்துக்கள், 91 முஸ்லீம்கள் மற்றும் 21 சீக்கியர்கள் இருந்தனர்.
நிலவியல்
[தொகு]தியோக் 31.12 ° வடகிலும் 77.35 ° கிழக்கிலும் அமைந்துள்ளது.[3] இதன் சராசரி உயரம் 1965 மீட்டர் (6446 அடி) ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 22 இல் ( இந்தியா-திபெத் சாலை ) அமைந்துள்ளது. இது சிம்லாவிலிருந்து 32 கி.மீ தூரத்தில் உள்ளது.
தியோக் அதிகாரத்தின் கீழ் வரும் ஏராளமான கிராமங்கள் உள்ளன.
போக்குவரத்து
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 5 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 705 வழியாக தியோக் இமாச்சலத்துடனும் இந்தியாவின் பிற பகுதிகளுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.[4] தியோக் சிம்லா விமான நிலையத்திலிருந்து 45 கி.மீ தொலைவிலும், சிம்லா ரயில் நிலையத்திலிருந்து 32 கி.மீ தொலைவிலும் உள்ளது
குறிப்புகள்
[தொகு]- ↑ Punjab State Gazetteers: pt. A. Simla Hill States. Punjab: Superintendent, Government Printing, 1935. 1935. p. 27.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ Falling Rain Genomics, Inc - Theog
- ↑ "National Highways in Himachal Pradesh" (PDF). Himachal Pradesh Public Works Department. Archived from the original (PDF) on 17 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)