தியேன்குங்-1
Appearance
தியேன்குங்-1 Tiangong-1 (天宫一号) | ||
---|---|---|
தியேன்குங் (இடது) சென்சோ விண்கலத்துடன் இணைவு (வரைவு) | ||
நிலையத் தரவுகள் | ||
பயணிகள்: | 3 | |
ஏவப்பட்டது: | செப்டம்பர் 29, 2011 | |
ஏவப்பட்ட இடம்: | ஜியூக்குவான் | |
நிறை: | 8,506 கிகி | |
நீளம்: | 10.4 m (34.1 அடி) | |
விட்டம்: | 3.35 m (11.0 அடி) | |
தற்போதைய கனவளவு: | 15 கனமீட்டர் | |
தியேன்குங்-1 Tiangong-1 (天宫一号) |
தியேன்குங்-1 (Tiangong-1) என்பது மக்கள் சீனக் குடியரசின் முதலாவது விண்வெளி ஆய்வுகூடம் ஆகும். இவ்வாய்வுகூடம் லோங் மார்ச் 2F/G என்ற ஏவுகலன் மூலம், 2011, செப்டம்பர் 29 அன்று ஏவப்பட்டது. இது தியேன்குங் விண்வெளி-நிலையத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்தின் மூலம் ஒரு நிரந்தரமான ஆட்களுடன் கூடிய விண்வெளி நிலையம் ஒன்றை 2020 ஆம் ஆண்டுக்குள் அமைப்பது சீனாவின் நோக்கம் ஆகும்.
2011 இன் இறுதியில் சென்சோ-8 என்ற ஆளில்லா விண்கலம் இந்த ஆய்வுகூடத்துடன் இணைப்பதற்காக ஏவப்படவுள்ளது. இரண்டு விண்கலன்களை இணைக்கின்ற சீனாவின் முதலாவது நடவடிக்கை இதுவாக இருக்கும். இதனை அடுத்து 2012 ஆம் ஆண்டில் தியேன்குங்-1 உடன் இணைவதற்காக சென்சோ-9, சென்சோ-10 போன்ற ஆட்களுடன் கூடிய விண்கலங்களையும் அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- Rocket launches Chinese space lab, பிபிசி, செப்டம்பர் 29, 2011
- China space station signals shift in space race, கார்டியன், செப்டம்பர் 30, 2011
- China launches TianGong-1 to mark next human space flight milestone, நாசா, செப்டம்பர் 28, 2011
- China tests 1st space station module for 2011 launch, chinadaily
- China launches TianGong-1 to mark next human space flight milestone, NASASpaceflight.com
- Unmanned space module to be launched in 2010, await space docking, xinhuanet
- தியேன்குங் ஒன்று விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது பரணிடப்பட்டது 2011-10-07 at the வந்தவழி இயந்திரம், சீன வானொலி, செப்டம்பர் 30, 2011