திம்பு மாவட்டம்
Appearance
திம்பு மாவட்டம்
ཐིམ་ཕུ་རྫོང་ཁག | |
---|---|
நாடு | பூட்டான் |
தலைமையிடம் | திம்பு |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,067 km2 (798 sq mi) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 1,38,736 |
• அடர்த்தி | 67/km2 (170/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 (பூட்டான் நேரம்) |
இணையதளம் | www |
திம்பு மாவட்டம் (Thimphu District) (Dzongkha: ཐིམ་ཕུ་རྫོང་ཁག་; [[Wylie transliteration|Wylie: Thim-phu rdzong-khag) பூட்டான் நாட்டின் 20 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மேற்கு-மத்திய கோட்டத்தில் அமைந்துள்ளது. பூட்டான் நாட்டின் தலைநகரமான திம்பு நகரம், திம்பு மாவட்டத்தின் தலைமையிடமாகும். ஜிக்மே தோர்ஜி தேசியப் பூங்கா இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை
[தொகு]2,067 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட திம்பு மாவட்டத்தின், மே, 2017-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 1,38,736 ஆக உள்ளது. [1]
மொழிகள்
[தொகு]திஃசொங்கா மொழி இம்மாவட்ட மக்களில் பெரும்பாலோரால் பேசப்படுகிறது.
நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]திம்பு மாவட்டம் திம்பு நகரம் மற்றும் 8 கேவோக் எனும்வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது :
- சாங் கேவோக்
- தாகாலா கேவோக்
- ஜென்யெக்கா கேவோக்
- கவாங் கேவோக்
- லிங்சி கேவோக்
- மெவாங் கேவோக்
- நரோ கேவோக்
- சோயி கேவோக்
படக்காட்சிகள்
[தொகு]-
திம்பு நகரம்
-
நெல் வயல்கள்
-
மரபு வீடுகள்