திம்சா
திம்சா (himsa) என்பது பழங்குடியினரின் நடன வடிவமாகும். இது முதன்மையாக ஆந்திரப் பிரதேசத்தில் போர்ஜா சாதிப் பெண்களால் ஆடப்படுகிறது.[1]
15-20 பெண்கள் கொண்ட குழு வட்டம் அமைத்து தங்கள் இல்லற வாழ்வின் நலனுக்காக தெய்வத்தைப் புகழ்ந்து நடனமாடுவார்கள். பெண்கள் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்வதால் அவர்கள் திருமணங்களிலும் நடனமாடுகிறார்கள். அவர்கள் பொதுவாக பழங்குடி ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிவார்கள். அதே சமயம் முன்னணியிலிருக்கும் பெண்மணியும் கையில் மயில் இறகை வைத்திருப்பார்.
தோற்றம்
[தொகு]திம்சா ஒடிசா மாநிலத்திலுள்ள கோராபுட் மாவட்டத்தில் பிறந்தது. ஆனால் இது விசாகப்பட்டினத்தின் அதிகாரப்பூர்வ நடனமாக மாறிவிட்டது.[2] திம்சா இந்த பிராந்தியத்தின் கலாச்சாரத்துடன் குறிப்பாக அரக்கு பள்ளத்தாக்கு , போரா குகைகளுக்கு அருகிலுள்ள இடங்களில் உள்ளது.
சான்றுகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.visitvizag.in/dhimsa.asp
- http://www.discoveredindia.com/andhra-pradesh/culture-in-andhra-pradesh/dance-in-andhra-pradesh/dhimsa.htm
- http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/dhimsa-dance-festival-inaugurated/article1204702.ece
- http://www.indiantravelportal.com/andhra-pradesh/dances/dhimsa.html பரணிடப்பட்டது 2019-10-31 at the வந்தவழி இயந்திரம்