திமிட்ரியோசு மாசுட்ரோவாசிலிசு
திமிட்ரியோசு மாசுட்ரோவாசிலிசு Dimitrios Mastrovasilis | |
---|---|
(2021) | |
நாடு | கிரேக்கம் |
பிறப்பு | 12 சூன் 1983 |
பட்டம் | கிராண்டுமாசுட்டர் (2003) |
பிடே தரவுகோள் | 2627 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2631 (சனவரி 2012) |
திமிட்ரியோசு மாசுட்ரோவாசிலிசு (Dimitrios Mastrovasilis) கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரராவார். 1983 ஆம் ஆண்டு சூன் மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2003 ஆம் ஆண்டில் பிடே அமைப்பு இவருக்கு கிராண்டு மாசுட்டர் பட்டத்தை வழங்கியது. 2004 ஆம் ஆண்டில் பிடே உலக சதுரங்க வெற்றியாளர் போட்டியிலும் 2017 ஆம் ஆண்டில் பிடே உலகக் கோப்பை போட்டியிலும் இவர் போட்டியிட்டார். 2023 ஆம் ஆண்டு அசர்பைசான் நாட்டின் பக்கூ நகரத்தில் நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பை போட்டியிலும் இவர் விளையாடினார்.
சதுரங்க வாழ்க்கை
[தொகு]2000 ஆம் ஆண்டு ஐரோப்பிய இளையோர் சதுரங்கப் போட்டியில் 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் திமிட்ரியோசு மாசுட்ரோவாசிலிசு வெள்ளிப் பதக்கம் பெற்றார் [1] 2003 ஆம் ஆண்டில் லிபியாவின் அச்லெட்டில் நடந்த 1 ஆவது மத்தியதரை இளையோர் சதுரங்க வெற்றியாளர் போட்டியிலும் இவர் வென்றார். [2] [3] இதற்கடுத்த ஆண்டு டோபோலாவில் கிரில் இயார்ச்சீவு உடன் சமநிலை முடிவைப் பெற்று 1ஆவது-2ஆவது இடத்தைப் பிடித்தார்.[4] 2007 ஆம் ஆண்டில் , அக்ரோபோலிசு பன்னாட்டு சதுரங்கப் போட்டியில் கிரில் இயார்ச்சீவு, வாதிம் மலகாட்கோ, மிர்சியா பார்லிகிராசு, இரிசுடோசு பனிகாசு மற்றும் திமிட்ரி சுவெதுசுகின் ஆகியோருடன் 2 ஆவது முதல் 7ஆவது இடத்தைப் பிடித்தார். [5] 2012 ஆம் ஆண்டில் இவர் லெரோசு தீவில் நடைபெற்ற ஆர்ட்டெமிசு கோப்பையை வென்றார். [6]
குழு போட்டி நிகழ்வுகளில், சதுரங்க ஒலிம்பியாடு உலக அணி சதுரங்க வெற்றியாளர் மற்றும் ஐரோப்பிய அணி ஆகியவற்றில் திமிட்ரியோசு மாசுட்ரோவாசிலிசு கிரேக்க நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [7] 2016 ஆம் ஆண்டில் இவர் 8 ஆவது லப்ளின் யூனியன் மெமோரியலில் போலந்து அணியை தோற்கடித்த ஐரோப்பா அணியின் ஒரு பகுதியாக இருந்தார். [8]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சதுரங்க கிராண்டுமாசுட்டர் அதானசியோசு மாசுட்ரோவாசிலிசு இவரது சகோதரர் ஆவார். [6] போலந்து பெண் கிராண்டுமாசுட்டர் இயோலாண்டா சவாட்சுகாவை இவர் மணந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jugend-Europameisterschaft U18 Burschen. chess-results.com.
- ↑ 1st Mediterranean Junior Championship 2003. FIDE.
- ↑ Minutes of General Assembly 2007 பரணிடப்பட்டது 13 மே 2016 at the வந்தவழி இயந்திரம். Mediterranean Chess Association.
- ↑ "Karadjord.-Serb.1804-2004". FIDE. பார்க்கப்பட்ட நாள் 8 April 2011.
- ↑ "Ilya Smirin wins Acropolis 2007". ChessBase. 26 August 2007. பார்க்கப்பட்ட நாள் 8 April 2011.
- ↑ 6.0 6.1 "GM Dimitrios Mastrovasilis lifts the Artemis Cup". Chessdom. 18 July 2012. பார்க்கப்பட்ட நாள் 7 October 2015."GM Dimitrios Mastrovasilis lifts the Artemis Cup". Chessdom. 18 July 2012. Retrieved 7 October 2015.
- ↑ "Men's Chess Olympiads: Dimitrios Mastrovasilis". OlimpBase. பார்க்கப்பட்ட நாள் 17 December 2011.
- ↑ Schulz, André (23 June 2016). "Chess Festival Lublin: Europe wins against Poland". Chess News. ChessBase. பார்க்கப்பட்ட நாள் 11 September 2017.
புற இணைப்புகள்
[தொகு]- டிமிட்ரியோஸ் மாஸ்ட்ரோவாசிலிஸ் செஸ் கேம்கள் 365Chess.com இல்