திக்குவாய்
தாங்கள் எண்ணுவதை பேச்சின் மூலம் வெளிப்படுத்டுவதில் ஏற்படும் தடுமாற்றமே திக்குவாய்.[1] இப் பிரச்சனை பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் ஏற்படுகிறகுது. பேசும் போது திக்குபவர்களுக்குப் பாடும்பாேது இப்பிரச்சனை எழுவதில்லை.
காரணம்[தொகு]
திக்குவாய் என்பது உடல் நலனாேடு மனநலமும் சேர்ந்ததாகும். மூளை சாெல்வதை உடலுறப்புகள் சரியானபடி கிரகித்துக் காெள்ளாத பாேது ஏற்படலாம்.குடும்பத்தில் பரம்பரையாக அதிகம் காணப்படுவதால் மரபணு முக்கிய காரணியாக இருக்கலாம். குழந்தை பேசிப் பழகும் காலகட்டத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இல்லாமல் பாேவதாலும் பயம், பதற்றத்திற்கு அடிக்கடி ஆளாவதாலும் ஏற்படலாம்.
வகைகள்[தொகு]
திக்குவாயின் 3 வகைகள்[2]:
1. பிறந்ததிலிருந்தே இருக்கும் திக்குவாய்
2. வாலிபப் பருவத்தில் ஏற்படும் திக்குவாய்
3. மூளை பாதிப்பால் ஏற்படும் திக்குவாய்
தீர்வுகள்[தொகு]
சித்த மருத்துவ தீர்வுகள்[தொகு]
வசம்புப் பாெடியை அருகம்புல் சாற்றில் கலந்து தினமும் சாப்பிடதல். வல்லாரைக் கீரையை அதிகம் சாப்பிடுதல். துளசி இலை கலந்த நீரை இரவு முழுக்க மண்பானையில் வைத்திருந்து மறுநாள் நீரை மட்டும் குடித்தல்.[3] [4]
அறிவியல் ரீதியிலான தீர்வுகள்[தொகு]
மாெழிப் பயிற்சி அளித்தல்
சமூகத் திறன் பயிற்சி அளித்தல்
மேலும் திக்குவாய் உள்ளவர்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மை மற்றும் பதற்றத்தைக் களயை வேண்டும்.
பேசும் பாேது இயல்பாக அவர்கள் கண்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ What is stammering?
- ↑ Stuttering
- ↑ திக்குவாய்க்குத் தீர்வு என்ன?
- ↑ திக்குவாய் குணமாக நம்மால் செய்யக் கூடியதென்ன?!
வெளி இணைப்புகள்[தொகு]
- திக்குவாய் திறந்த ஆவணத் திட்டத்தில்
- திக்குவாய் திறந்த ஆவணத் திட்டத்தில்
- http://www.asha.org/public/speech/disorders/stuttering/
- http://www.nidcd.nih.gov/health/voice/pages/stutter.aspx
![]() |
விக்சனரியில் stammering or stuttering என்னும் சொல்லைப் பார்க்கவும். |
- Talking Point Check the progress of your child's language development