தாவ்கின்சியா உத்தரா
தாவ்கின்சியா உத்தரா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரினிபார்மிசு
|
குடும்பம்: | சிப்ரினிடே
|
பேரினம்: | தாவ்கின்சியா
|
இனம்: | தா. உத்தரா
|
இருசொற் பெயரீடு | |
தாவ்கின்சியா உத்தரா (உன்மேஷ் கத்வதே மற்றும் பலர் 2020)[1] |
தாவ்கின்சியா உத்தரா (Dawkinsia uttara), வடக்கு இழை பார்ப் என்பது சிப்பிரினிடே குடும்பத்தைச் சேர்ந்த நன்னீர் மீன் சிற்றினமாகும்.
சொற்பிறப்பியல்
[தொகு]பரிணாம உயிரியலாளர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் நினைவாக தாவ்கின்சியா என்ற பேரினப் பெயர் வழங்கப்பட்டது. அதே சமயம் உத்தரா என்ற சிற்றினத்தின் ஆசிரியரான உன்மேஷ் கத்வதேவின் தாயான உத்தரா கத்வதேவைக் குறிக்கிறது.[2]
விளக்கம்
[தொகு]தாவ்கின்சியா உத்தரா சிறிய அளவிலான மீன் ஆகும். இது 12 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. வகைப்பாட்டியல் அடிப்படையில் தாவ்கின்சியா உத்தரா என்பது "பிலமெண்டோசா" இனக் குழுவின் ஒரு சிற்றினக் குழுவாகும். இது இதன் நெருங்கிய பேரினமான தாவ்கின்சியா பிலமென்டோசாவிலிருந்து வேறுபட்டது. இதனுடைய வால் துடுப்பானது குறுகிய நீளமான கருப்பு முனையுடன் கூடியது.[3]
வாழ்விடம்
[தொகு]வடக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் மகாராட்டிராவின் காஜாலி, தெரேகோல் மற்றும் சக்புதி ஆறுகளின் மேல் பகுதியில் தாவ்க்கின்சியா உத்தரா காணப்படுகிறது. இது ஆழமற்ற மற்றும் மெதுவாக ஓடும் நீரோடைகளில் வாழ்கிறது. இங்கு அது சிறிய முதுகெலும்பில்லாத உயிரினங்களை உண்ணுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Puntius srilankensis" in FishBase. April 2006 version.
- ↑ "A new species of filament barb found in the Western Ghats". Deccan Herald.
- ↑ 3.0 3.1 Katwate, Unmesh; Apte, Deepak; Raghavan, Rajeev (November 2020). "Dawkinsia uttara, a new species of filament barb (Teleostei: Cyprinidae) from the Western Ghats of India". Vertebrate Zoology 70 (4): 717-730. doi:10.26049/VZ70-4-2020-11. https://www.researchgate.net/profile/Unmesh-Katwate/publication/346515808_Dawkinsia_uttara_a_new_species_of_filament_barb_Teleostei_Cyprinidae_from_the_Western_Ghats_of_India/links/5fc5e362a6fdcce952692314/Dawkinsia-uttara-a-new-species-of-filament-barb-Teleostei-Cyprinidae-from-the-Western-Ghats-of-India.pdf.