தாரகேசுவர் சென்குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரகேசுவர் சென்குப்தா
சாகித் தாரகேசுவர் சென்குப்தா
பிறப்பு15 ஏப்ரல் 1905
கெய்லா கிராமம், வங்காள பிரசிடென்சி, பிரிட்டிசு இந்தியா
இறப்பு16 செப்டம்பர் 1931
கிசுலி தடுப்பு முகாம், பிரிட்டிசு இந்தியா
(இப்போது இந்தியா)
தேசியம்இந்தியன்
அறியப்படுவதுஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு

தாரகேசுவர் சென்குப்தா (Tarakeshwar Sengupta) (15 ஏப்ரல் 1905 - 16 செப்டம்பர் 1931) சிட்டகாங் ஆயுதக் களஞ்சியத் தாக்குதலில் பங்கேற்ற இந்திய சுதந்திர போராட்ட ஆர்வலர் ஆவார். அவர் மாசுடர்டா சூர்யா சென்னின் புரட்சிக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

தாரகேசுவர் சென்குப்தா 1905 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி பிரிட்டிசு இந்தியாவின் பாரிசல் மாவட்டத்தில் உள்ள கெய்லா கிராமத்தில் தற்போது வங்காளதேசத்தில் ஒரு வங்காள நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். அவர் தனது குடும்ப சூழலில் தேசபக்தியின் சிந்தனையால் ஈர்க்கப்பட்டார்.

புரட்சிகர நடவடிக்கைகள்[தொகு]

தாரகேசுவர் சென்குப்தா ஒரு சமூக சேவகர். சுகாந்தரின் கைலா கிளையுடன் இணைக்கப்பட்ட சங்கர் மடம் மற்றும் கைலா சேவாசுரம் ஆகியவற்றிலும் இணைக்கப்பட்டார். கைது செய்யப்ட்டு சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். உப்பு சத்தியாகிரகத்தில் சேர்ந்து மீண்டும் டி.ஐ. ஆட்சியில் கைது செய்யப்பட்டு கிச்லி சிறைக்கு அனுப்பப்பட்டார்.[1]

இறப்பு[தொகு]

1931 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி அன்று ,கிச்லி தடுப்பு முகாமில் சந்தோசு குமார் மித்ராவுடன் சேர்த்து தாரகேசுவர் சென்குப்தாவை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. NARESH JANA. "IIT revival pill for historic Hijli Jail". telegraphindia.com. Archived from the original on September 19, 2002. பார்க்கப்பட்ட நாள் December 11, 2017.NARESH JANA. "IIT revival pill for historic Hijli Jail". telegraphindia.com. Archived from the original on September 19, 2002. Retrieved December 11, 2017.
  2. "IIT-Kharagpur remembers its Hijli Jail days" (in en-US). The Financial Express. http://www.financialexpress.com/archive/iit-kharagpur-remembers-its-hijli-jail-days/130948/. 
  3. "Historical site" (in en). The Hindu Business Line. http://www.thehindubusinessline.com/todays-paper/tp-others/tp-variety/historical-site/article1670939.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரகேசுவர்_சென்குப்தா&oldid=3845051" இலிருந்து மீள்விக்கப்பட்டது