உள்ளடக்கத்துக்குச் செல்

தாமான் தோன்றிக்கோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாமான் தோன்றிக்கோன் சேர நாட்டு குறுநில மன்னர்கள் வம்சத்தில் வந்தவனாவான். இவன் தற்கால கரூர் பக்கத்திலுள்ள தான்தோன்றி மலையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஆண்டவன்.[1]

ஐயூர் முடவனார் என்னும் புலவர் கிள்ளிவளவன் தவிர எந்த மன்னனிடமும் கையேந்த மாட்டேன் என உறுதி மொழி எடுத்திருந்தார். ஒரு தடவை அவர் மாட்டுவண்டியில் சென்று கொண்டிருந்த போது அவ்வண்டியின் காளை இறந்து விட, அதை அறிந்த தாமான் தோன்றிக்கோன் அந்த புலவரின் உறுதி மொழியை மனதில் வைத்து அப்புலவர் கேட்கும் முன்னரே காளைகள் பூட்டிய வண்டியையும், என்னிலடங்கா பசுக்களையும் தானமாகக் கொடுத்தான். அவ்வுள்ளம் கண்டு நெகிழ்ந்த புலவர் அவனை சிறப்பித்து பாடிய பாடல் புறநானூற்றின் 399ஆவது பாடலாகும்.

மேற்கோள்

[தொகு]
  1. ஔவை துரைசாமி பிள்ளையின் புறநானூறு 399 உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமான்_தோன்றிக்கோன்&oldid=2598472" இலிருந்து மீள்விக்கப்பட்டது