தோன்றி (மலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோன்றி மலை அரசன் தாமான்தோன்றிக்கோன். ஆனிரைகள் மேயும் நிலம் கொண்ட ஆறு 'தண்ணான்பொருநை' (தண் ஆன் பொருநை). அதுபோலத் தாவும் மான்கள் தோன்றும் மலை 'தாமான்தோன்றி'. இந்த மலையில் பாய்ந்த அருவி கொட்டுவதில்லை. 'இழும்' என வழிந்தோடியது.[1] இதனைக் கருவூருக்கு அருகிலுள்ள தான்தோன்றி மலை என அறிஞர்கள் கருதுகின்றனர். [2]

அடிக்குறிப்பு[தொகு]

  1. இழுமென இழிதரும் அருவி
    வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே. புறநானூறு 399

  2. ஔவை சு. துரைசாமிப்பிள்ளை புறநானூறு 399 உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோன்றி_(மலை)&oldid=2565950" இருந்து மீள்விக்கப்பட்டது