தாமசர்லா ஜனார்த்தன ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமசர்லா ஜனார்த்தன ராவ்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2014–2019
தொகுதிஒங்கோலு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
துணைவர்நாக சத்யலதா[1]
பிள்ளைகள்2 மகள்கள்
வாழிடம்(s)டி. நாயுடு பாலேம், டாங்குடூர், பிரகாசம் மாவட்டம்
வேலைஅரசியல்வாதி, ச.ம.உ
வியாபாரம்

தாமசர்லா ஜனார்த்தன ராவ் (Damacharla Janardhana Rao) ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் அரசியல்வாதி ஆவார். [2]

தொடக்க கால வாழ்க்கை[தொகு]

இவர் முன்னாள் அமைச்சர் தாமசர்லா ஆஞ்சநேயுலுவின் பேரன் ஆவார். பள்ளிப்படிப்பு மற்றும் இடைநிலைப் படிப்பை வட்லமுடியில் உள்ள விக்னன் கல்லூரியில் பயின்றார். 1998 இல் பெங்களூரில் உள்ள பிஇஎஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (பிஇஎஸ் பல்கலைக்கழகம்) தொழில்நுட்பவியல் இளையர் பட்டம் படித்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

தெலுங்கு தேசம் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 2010-ல் பிரகாசம் மாவட்டக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அன்றிலிருந்து இன்றுவரை மாவட்டத்தில் கட்சியை நடத்தி வருகிறார். 2009 ஆம் ஆண்டு தனது தாத்தா இறந்ததால் காலியாக இருந்த காண்டேபி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை எதிர்பார்த்தார். ஆனால் அந்த இடம் தொகுதி மறுசீரமைப்பின்படி தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டது, எனவே இவர் 2009 தேர்தலில் போட்டியிடவில்லை. இவர் 2012-ஆம் ஆண்டில் ஓங்கோல் இடைத்தேர்தலில் போட்டியிட்டு பாலினேனி சீனிவாச ரெட்டியிடம் தோல்வியடைந்தார். பின்னர் 2014-ஆம் ஆண்டில் அதே தொகுதியில் பாலினேனிக்கு எதிராக 12,428 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். அதன் பிறகு 2019 ஆந்திரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் தனது பரம எதிரியான பாலினேனி சீனிவாச ரெட்டியிடம் 22,400 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Magunta, Damacharla families steal the show". தி இந்து. 4 May 2014. பார்க்கப்பட்ட நாள் 13 July 2015.
  2. "DAMACHARLA JANARDHANA RAO (Winner)". myneta.inforg. பார்க்கப்பட்ட நாள் 13 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசர்லா_ஜனார்த்தன_ராவ்&oldid=3858328" இலிருந்து மீள்விக்கப்பட்டது