தானியேல் புயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தானியேல் புயல்
2023 செப்டம்பர் 9 இல் நடுநிலக் கடல்
பகுதியில் தானியேல் புயல்
வானிலை வரலாறு
தோற்றம்4 செப்டம்பர் 2023
கலைவு12 செப்டம்பர் 2023
Subtropical storm
10-நிமிடம் நீடித்தது (EUMETSAT)
அதிகளவு காற்று85 km/h (50 mph)
ஒட்டுமொத்த விளைவுகள்
இறப்புகள்11,497+ (உறுதிப்படுத்தப்பட்டது)[1][2]
18,000–20,000 (மதிப்பீடு)[3]
காயப்பட்டோர்7,000+
காணாமல்போனோர்10,100+
சேதம்>US$2 பில்லியன் (US$2.14 பில்லியன் in 2023)
பாதிக்கப்பட்ட பகுதிகள்லிபியா, கிரேக்கம், பல்காரியா,
துருக்கி,எகிப்து, இஸ்ரேல்

தானியேல் புயல் (Storm Daniel) அல்லது சூறாவளி தானியேல் (Cyclone Daniel) என்பது இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிக மோசமானதும், அதிக சேதத்தை உண்டுபண்ணியதுமான ஒரு நடுநிலக் கடல் வெப்பமண்டலச் சூறாவளியும், 2023 இன் இன்றுவரை மிக மோசமான வானிலை நிகழ்வுமாகும்.[4] 2023 செப்டம்பர் 4 இல் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவான இப்புயல், கிரேக்கம், பல்காரியா, துருக்கி ஆகிய நாடுகளை விரிவான வெள்ளத்துடன் பாதித்தது. புயல் பின்னர் ஒரு நடுநிலக் கடல் தாழ்வாக ஒழுங்கமைக்கப்பட்டு தானியேல் புயல் எனப் பெயரிடப்பட்டது. இது விரைவில் அரை வெப்பமண்டலப் பண்புகளைப் பெற்று லிபியாவின் கடற்கரையை நோக்கி நகர்ந்து, அங்கு அது பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. புயல் ஒரு ஒமேகா தொகுதியின் விளைவாக உயர் அழுத்த மண்டலமாக உருவான இப்புயல், இரண்டு குறைந்த அழுத்த மண்டலங்களுக்கு இடையில் மாறி, கிரேக்க எழுத்தான Ω வடிவமான ஐசோபார்களாயின.[5][6]

கிரேக்கத்தில், அதன் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிக மோசமான புயலாகக் கருதப்பட்டது, கடுமையான மழை வெள்ளத்திற்கு இது வழிவகுத்தது, 2 பில்லியன் யூரோக்களுக்கு மேல் சேதத்தை ஏற்படுத்தியது. லிபியா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது, மழை பெய்வதால் டெர்னா நகருக்கு அருகில் இருந்த இரண்டு அணைகளும் இடிந்து விழுந்தன. இது 10,000 இற்கும் அதிகமானோரின் இறப்புகளுக்கு வழிவகுத்தது, 10,000 முதல் 100,000 பேர் வரை காணாமல் போயினர், இருப்பினும் சரியான புள்ளிவிவரங்கள் ஆதாரத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன. இத்தகைய பேரழிவுகளுக்கு லிபியாவின் பெரும் பாதிப்பு அதன் 2014-2020 உள்நாட்டுப் போரில் குற்றம் சாட்டப்பட்டது, இப்போரினால் லிபியாவின் முக்கியமான உள்கட்டமைப்பு சேதப்படுத்தப்பட்டு, புயலுக்கு முன் மோசமான நிலையில் இருந்தது. இதைத் தொடர்ந்து, நடுநிலக் கடலில் உள்ள பல நாடுகள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி வழங்குவதாக உறுதியளித்தன.

தாக்கம்[தொகு]

தானியேல் புயலினால்
ஏற்பட்ட பாதிப்புகள்
நாடு இறப்புகள்
கிரேக்கம் 16[7][8]
துருக்கி 7[9]
பல்காரியா 4[10]
லிபியா 11,470[1] (தெர்னா நகரில் மட்டும் 11,300)[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Flooding death toll soars to 11,300 in Libya’s coastal city of Derna" (in en). அல் ஜசீரா. 15 September 2023. https://www.aljazeera.com/news/2023/9/15/flooding-death-toll-soars-to-11300-in-libyas-coastal-city-of-derna. 
  2. 2.0 2.1 "Death toll hits 11,300 in Libyan city destroyed by floods". NBC News. 14 September 2023 இம் மூலத்தில் இருந்து 14 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230914093705/https://www.nbcnews.com/news/world/libya-floods-death-toll-derna-rcna105001. 
  3. "Libya floods: Number of deaths in Derna could reach 20,000, mayor says". Sky News. 14 September 2023 இம் மூலத்தில் இருந்து 14 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230914105531/https://news.sky.com/story/libya-floods-number-of-deaths-in-derna-could-reach-20-000-mayor-says-12960801. 
  4. "Storm Daniel continues to sweep through the Mediterranean Basin". European Union, Copernicus Sentinel-3 imagery. 10 September 2023 இம் மூலத்தில் இருந்து 12 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230912043534/https://www.copernicus.eu/en/media/image-day-gallery/storm-daniel-continues-sweep-through-mediterranean-basin. 
  5. Badshah, Nadeem (6 September 2023). "UK heat and floods in south-east Europe blamed on 'omega' weather system". தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 10 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230910005413/https://www.theguardian.com/world/2023/sep/06/uk-heatwave-floods-south-east-europe-omega-weather-system. 
  6. "UK heatwave: What is an omega block – and how is it causing our extreme weather?". Sky News. 6 September 2023 இம் மூலத்தில் இருந்து 7 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230907154254/https://news.sky.com/story/uk-heatwave-what-is-an-omega-block-and-how-is-it-causing-our-extreme-weather-12956027. 
  7. "Body found by divers in Greece raises death toll from recent storm to 16". The Associated Press. https://abcnews.go.com/International/wireStory/disaster-hit-central-greece-officials-face-investigation-claims-103148600. 
  8. "Body found by divers in Greece raises death toll from recent storm to 16". The Toronto Star. https://www.thestar.com/news/world/europe/body-found-by-divers-in-greece-raises-death-toll-from-recent-storm-to-16/article_a67cddd3-0614-5542-a0cb-fd771df0af7b.html. 
  9. "In photos: September brings deadly flooding around the world" (in en). 2023-09-13. https://www.euronews.com/green/2023/09/13/libya-greece-brazil-climate-driven-storms-cause-catastrophic-flooding-around-the-world. 
  10. Манчева, Гергана. "България потъна в скръб за жертвите от голямото наводнение" (in bg). Bulgarian National Radio. https://bnr.bg/radiobulgaria/post/101875048/balgaria-potana-v-skrab-za-jertvite-ot-golamoto-navodnenie. "Днес е Ден на Национален траур, в памет на четирите жертви от голямото наводнение на Южното Черноморие от 5 септември." 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தானியேல்_புயல்&oldid=3837172" இருந்து மீள்விக்கப்பட்டது