தாட் நோய்க்கூட்டறிகுறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாட் கூட்டறிகுறி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்பு psychiatry
ICD-10 F48.8

தாட் நோய்க்கூட்டறிகுறி (Dhat syndrome) என்பது இந்தியத் துணைக்கண்ட ஆண்களில் காணப்படும் தொன்நம்பிக்கைப் பண்பாடு ‌சார்ந்த நோய் ஆகும். பழைய இந்து நம்பிக்கைகளின் படி 40 துளி குருதி சேர்ந்து ஒரு துளி எலும்பு மஜ்ஜை உண்டாகிறது. 40 துளி எலும்பு மஜ்ஜை சேர்ந்து ஒரு துளி விந்துப் பாய்மம் அல்லது தாது (தாட்) உண்டாகிறது. இத்தகைய விந்துப்பாய்மம் சுய இன்பம் போன்ற செயல்களால் வீணாவது இந்த ஆண்களின் உள்ளத்தில் குற்ற உணர்வை உண்டாக்குகிறது. அவர்கள் மருத்துவர்களிடம் களைப்பு, சிறுநீரில் விந்து வெளியேறுதல், விந்து முந்துதல், விறைப்பின்மை போன்ற புகார்களுடன் வருவர்.

இது பெரும்பாலும் உளரீதியிலான நோயாகும். எனவே ஆலோசனை வழங்குதல், நடத்தை மாற்ற சிகிச்சை மற்றும் மனஅழுத்த எதிர்ப்பு மருந்துகள் ஆகியவை இந்நோய்க்கான மருத்துவ முறைகளாகும்.

வெளியிணைப்புகள்[தொகு]