விந்து முந்துதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விந்து முந்துதல்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஉளநோய் மருத்துவம், உளவியல்
ஐ.சி.டி.-10F52.4
ஐ.சி.டி.-9302.75
மெரிசின்பிளசு001524
ஈமெடிசின்med/643
பேசியண்ட் ஐ.இவிந்து முந்துதல்

விந்து முந்துதல் (premature ejaculation) என்பது ஒரு ஆண் தனது பாலியல் துணை விரும்புவதற்கு முன்னோ அல்லது தானே விரும்பும் முன்னோ விந்துவை வெளித்தள்ளுதல் ஆகும்.[1]

வரையறை[தொகு]

மேற்கண்ட வரையறையில் இவ்வளவு நேரத்திற்கு முன்னமே விந்து வெளிவருதல் என்பது போன்ற திட்டவட்டம் எதுவும் இல்லை. ஓருவர் 10 நிமிடத்தில் உச்சநிலை அடைகிறார். அவரின் பாலியல் துணை 20 நிமிடத்தில் உச்சநிலை அடைகிறார் என்றும் கொண்டால் இது விந்து முந்துதல் ஆகும். இதே 10 நிமிடத்தில் இன்னொருவர் உச்ச நிலை அடைவதாகவும் ஆனால் அவரின் பாலியல் துணை 8 நிமிடங்களுக்குள்ளாகவுமே உச்சநிலை அடைவதாகவும் கொண்டால் இது விந்து முந்துதல் அன்று.

காரணம்[தொகு]

இது உடல்ரீதியாக உள்ள எந்தப் பிரச்சினையாலும் ஏற்படுவதில்லை. முற்று முழுதாக மனம் சம்பந்தப்பட்டதாகும். ஆணிடம் ஏற்படுகின்ற அச்ச நிலை, ஆரம்ப காலத்தில் ஏற்படும் பதட்டம், தன்னால் துணையை திருப்திப்படுத்த முடியுமா என்ற சந்தேகங்களே இந்த நிலையைத் தோற்றுவிக்கிறது. இதனாலேயே உறவில் ஈடுபடத்தொடங்கிய காலத்தில் அநேகமான ஆண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள்.

தீர்வு[தொகு]

இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவருவதற்கு பாலியல் துணையின் உதவியும் தேவைப்படுகிறது. முதலில் ஆண் மனதளவில் தன்னைத் திடப்படுத்திக் கொள்வதோடு மனதை இலகுவாக்கிக் கொள்ள வேண்டும். உறவில் ஈடுபடும்போது தொடக்கத்திலேயே புணர்ச்சியை நோக்கி செல்லாமல் அதற்கு முன் தொடுகை செய்கைகள்(Foreplay) மூலம் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். இதன் போது ஆணுறுப்பிலே தொடுகை ஏற்படுவதை இறுதிவரை தவிர்க்க வேண்டும். பின் ஆண் உறவில் ஈடுபடும் போது உச்சநிலை நெருங்கி வரும்போது புணர்ச்சியை நிறுத்தி சற்று மனதை இலகுவாக்கி (relax) மீண்டும் புணர்ச்சியை ஆரம்பித்து, உச்ச நிலை அடையும் நிலை வரும் போது புணர்ச்சியைத் தவிர்த்து சற்று ஓய்வெடுத்து மீண்டும் புணர்ச்சியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு செய்வதால் நாளடைவில் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்து_முந்துதல்&oldid=3571666" இருந்து மீள்விக்கப்பட்டது