பேச்சு:தாட் நோய்க்கூட்டறிகுறி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

syndrome என்பதை நோய்க்கூட்டறிகுறி என்று குறிப்பது எதனால் என்று விளங்கவில்லை. அறிகுறி புரிகின்றது. நோய்க்குறி புரிகின்றது. குறைபாடு, குறைகுறி என்பனவும் பொருந்துமோ? கூட்டு என்பது எதற்காக இடையே சேர்க்கப்பட்டுள்ளது என்று விளக்க முடியுமா, மரு.கார்த்திகேயன்?--செல்வா 02:44, 22 பெப்ரவரி 2011 (UTC)

பேச்சு:சுடாக்ஹோம் கூட்டறிகுறியின் அடிப்படையில் இத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது பேராசிரியரே! [syndrome - a group of signs and symptoms that occur together and characterize a particular abnormality or condition. symptoms - அறிகுறி group of symptoms - கூட்டறிகுறி, குறிப்பிட்ட நோய்நிலையைக் குறித்தலால் நோய்க்கூட்டறிகுறி] --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 13:39, 22 பெப்ரவரி 2011 (UTC)
நன்றி மரு. கார்த்திகேயன். கூட்டறிகுறி நன்றாக உள்ளது. --செல்வா 02:35, 23 பெப்ரவரி 2011 (UTC)