தாஜிக் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாஜிக் மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-1tg
ISO 639-2tgk
ISO 639-3tgk

தாஜிக் மொழி, மத்திய ஆசியாவில் பேசப்படும் ஒரு மொழியாகும். இது பாரசீக மொழி யின் ஒரு வேறுபாடு ஆகும். இது, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் இந்திய-ஈரானியப் பிரிவிலுள்ள, ஈரானிய மொழிகளுள் ஒன்று. இதனைப் பேசுவோரில் பெரும்பான்மையினர் தாஜிகிஸ்தானிலும், உஸ்பெகிஸ்தானிலும் உள்ளனர். தாஜிக் மொழியே தாஜிகிஸ்தானின் உத்தியோக மொழியாகும்.

ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பேசப்பட்ட பாரசீக மொழியில் இருந்து தாஜிக் மொழி பிரிவடைந்தது. நாட்டு எல்லைகள், தரப்படுத்தல் நடவடிக்கைகள், அயலிலுள்ள ரஷ்ய மற்றும் துருக்கிய மொழிகளின் தாக்கம் என்பவையே இம் மாற்றத்துக்கான காரணங்கள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாஜிக்_மொழி&oldid=2169171" இருந்து மீள்விக்கப்பட்டது