தளிக்குனு சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தளிக்குனு சிவன் கோயில்

தளிக்குனு சிவன் கோயில் இந்தியாவின் கேரளா, கோழிக்கோடு, மங்காவேயில் உள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

மலபாரில் உள்ள பழமையான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இந்தக் கோயில் பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தற்போது இந்தக் கோயி‘வில் கோழிக்கோடு ஜாமோரின் தலைமையில் உள்ளது. தளி, திருவண்ணூர், வரக்கல், புதூர், கோவிந்தபுரம் முதலியன கோழிக்கோடு நகரத்தில் உள்ள பிற முக்கிய கோயில்கள் என்பதோடு திப்புவின் இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக முற்றிலும் அழிக்கப்பட்ட கோயில்களாகும். ஸ்ரீரங்கப்பட்டணத்தில் திப்பு சுல்தானின் தோல்வி மற்றும் 1792ஆம் ஆண்டின் உடன்படிக்கையைத் தொடர்ந்து அவற்றில் சில ஜமோரினால் புனரமைக்கப்பட்டன [2]

அமைவிடம்[தொகு]

இக்கோயில் கோழிக்கோட்டில் மங்காவே என்னுமிடத்தில் அமைந்துள்ளது. [3] கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலும், தனியார் மற்றும் KSRTC பேருந்து நிலையங்களிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. 

விழாக்கள்[தொகு]

வருடத்தில் வரும் பன்னிரண்டு சிவராத்திரிகளில் மகா சிவராத்திரி மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இக்கோயிலில் மகா சிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. .

கோயில் அமைப்பு[தொகு]

கோயிலின் மூலவர சன்னதியானது கிழக்கு நோக்கிய நிலையில், சதுர வடிவில் உள்ளது. இங்கு சிவபெருமான் லிங்க வடிவில் உள்ளார். வெள்ளிப்பிறையால் அந்த லிங்கம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நந்தி சிலையுடன் கூடிய நம்ஸ்கார மண்டபம் இங்கு உள்ளது. தென்மேற்கு மூலையில் கணபதி மற்றும் ஐயப்பனுக்கான சன்னதிகள் உள்ளன. கோயில் வளாகத்தில் ஒரு கிணறு கோயிலின் பயன்பாட்டிற்காக உள்ளது. வெளிப்புறத்தில் பிரதிக்ஷண வழி, பெரிய ஆல மரம் ஆகியவை உள்ளன. ஆலமரத்தைச் சுற்றி நாக சிற்பங்கள் உள்ளன. கோயில் வளாகத்தின் நான்கு பக்கங்களிலும் நுழைவாயில்கள் உள்ளன. அவ்வாறே, நான்கு பக்கங்களிலிருந்தும் சாலை வசதி உள்ளது. இருந்தபோதிலும், கோயில் கிழக்கு நோக்கி இருப்பதால், கிழக்கு நுழைவாயில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

பிற தெய்வங்கள்[தொகு]

கணபதி, ஐயப்பன், பெரிய ஆலமரம், நாகராஜா போன்றவை பிற தெய்வங்களாக வழிபடப்படுகின்றன.

புதுப்பித்தல் மற்றும் மேம்பாடு[தொகு]

தற்போது கோயில் வளர்ச்சிக் குழு மற்றும் தேவஸ்தானத்தின் மேற்பார்வையில் கோயில் புதுப்பிக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு, தற்போது சுத்தம்பலத்தின் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணி விரைவில் நிறைவுறும் நிலையில் உள்ளது.

படத்தொகுப்பு[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Temple finder - Thalikkunu Shiva Temple, Kerala, Kozhikode".
  2. "RELIGIOUS INTOLERANCE OF TIPU SULTAN".
  3. "Official Website Of Calicicut City Police".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தளிக்குனு_சிவன்_கோயில்&oldid=3831387" இலிருந்து மீள்விக்கப்பட்டது