தல்ரா வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தல்ரா வனவிலங்கு சரணாலயம் (Talra Wildlife Sanctuary) இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் அமைந்துள்ளது. 1962 ஆம் ஆண்டு ஒரு வனவிலங்கு சரணாலயமாக மாறியது. இந்த வனவிலங்கு சரணாலயம் 40 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. தல்ரா வனவிலங்கு சரணாலயம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாகும். [1] [2] பனிச்சிறுத்தையின் தாயகமாகவும் இச்சரணாலயம் கருதப்படுகிறது. பனிச்சிறுத்தை இப்பகுதியில் மிகவும் அரிதானது.

அமைவிடம்[தொகு]

தல்ரா வனவிலங்கு சரணாலயம் 0.954 முதல் 4.00 வரையிலான  கிமீ, மற்றும் 22.56 சதுரகிலோமீட்டர் வரையிலான சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தைக் கொண்டுள்ளது.  சிம்லா மாவட்டத்தில் இருந்து 92 கிமீ தொலைவில் அமைந்துள்ளது, கடல் மட்டத்தில் இருந்து வனவிலங்கு சரணாலயம் 1,500 மீ முதல் 3,324 மீ வரையிலான உயரத்தில் உள்ளது. [3]

வனவிலங்கு[தொகு]

தல்ரா வனவிலங்கு சரணாலயம் மேல் மற்றும் கீழ் மேற்கு இமயமலையை பூர்வீகமாகக் கொண்ட காடுகளின் தாயகமாகும். அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிகள் கருவேலமரம் மற்றும் பிர் போன்ற மரங்களால் மூடப்பட்டிருக்கும். தியோதர், போச் பத்ரா, ராய் மற்றும் ராகல் போன்ற இதர தாவர வகைகளும் இங்குள்ளன.[3] சிறுத்தைகள், இமயமலைக் கருங்கரடி, செரோவ், முள்ளம்பன்றி, குரைக்கும் மான், இமாலயன் பாம் சிவெட்டு, யூரேசியன் இசுபாரோகாக்து, பறக்கும் அணில் போன்ற விலங்கினங்கள் இங்கு காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Himachal Pradesh". www.wii.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.
  2. "Himachal Pradesh Forest Department". hpforest.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.
  3. 3.0 3.1 "Talra Wildlife Sanctuary". WildTrails | The One-Stop Destination for all your Wildlife Holidays (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2017-09-23. பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.