தலாரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டின் தலாரியா வேலைப்பாடு

தலாரியா (இலத்தீன்: tālāria) அல்லது சிறகு செருப்புகள் (பண்டைக் கிரேக்கம்πτηνοπέδῑλος ptēnopédilos) என்பது கிரேக்க தூதர் கடவுளான எர்மெசுவின் (ரோமானிய மெர்குரி) சிறகுகள் கொண்ட செருப்பு சின்னமாகும். அவை எப்பெசுடசு கடவுளால் அழியாத தங்கத்தால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் அவை எந்த பறவையை விடவும் வேகமாக பறக்க வல்லன.

சொற்பிறப்பியல்[தொகு]

லத்தீன் பெயர்ச்சொல் தலாரியா என்பது "கணுக்கால்" என்பதைக் குறிக்கிறது. இதிலிருந்து "சிறகுகள் கொண்ட செருப்புகள்" என்பதன் பொருளை ரோமானியர்கள் எவ்வாறு அடைந்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை, ஒருவேளை கணுக்கால்களில் இறக்கைகள் இணைக்கப்பட்டிருக்கலாம் அல்லது கணுக்கால்களைச் சுற்றி செருப்புகள் கட்டப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

சான்றுகள்[தொகு]

அறியப்பட்ட மிகப் பழமையான பிரதிநிதித்துவங்களில் ஒன்று: பெர்சியஸ் தலாரியா அணிந்து செல்கிறார் (c. கிமு 660, இலூவா)

பண்டைய கிரேக்க இலக்கியத்தில், எர்மெசுவின் செருப்புகள் முதலில் ஓமரால் குறிப்பிடப்படுகின்றன. அவை தங்கத்தால் ஆன அழியாத/தெய்வீக செருப்புகள் என்று குறிப்பிடப்படுகின்றன. ஆனா இதில் "சிறகுகள்" பற்றி எந்த ஒரு விளக்கமும் விவரிக்கப்படவில்லை.[1][2]

செருப்புகளின் சிறகுகள் பற்றிய விளக்கம் முதலில் ஷில்ட் ஆஃப் ஹெராக்கிள்ஸ் (c. 600 – 550 BC) என்ற கவிதையில் தோன்றுகிறது, இது "சிறகுகள் கொண்ட செருப்புகள்" பற்றி பேசுகிறது.[2][3] சற்றே பிற்காலத்தில் (கி.மு. 520) ஓமரின் கீதம், செருப்புகள் இறக்கையுடன் இருந்ததாக வெளிப்படையாகக் கூறவில்லை, இருப்பினும் அவை எர்மெசு அப்பல்லோவின் கால்நடைகளைத் திருடும்போது எந்த தடயத்தையும் விட்டுவிடாமல் பாதுகாத்ததாக கூறப்படுகிறது.[4]

ஒரு மதிப்பீட்டின்படி, கிமு 5 ஆம் நூற்றாண்டில், சிறகுகள் கொண்ட செருப்புகள் எர்மெசு கடவுளின் பொதுவான ஒரு சின்னாமாக கருதப்பட்டது.[2] செருப்புகள் இறக்கையுடன் இருப்பதைக் குறிக்கும் ஒரு பிந்தைய நிகழ்வு ஆர்ஃபிக் பாடல்கள் (கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரை) எனும் நூலில் வருகிறது.[5]

மெடூசாவைக் கொல்ல பெர்சியசு எர்மெசுவின் செருப்பை அணிந்து சென்றதாக கூறப்படுகின்றது.[6] எசுக்கிலசு கூற்றுப்படி, எர்மெசு அவற்றை நேரடியாக பெர்சியசுக்குக் கொடுக்கிறார்.[7][8]

தலேரியா என்ற சொல் 1 ஆம் நூற்றாண்டில் ஓவிட் என்பவரால் பயன்படுத்தப்பட்டது, அவருக்கு முன்னர், பல்வேறு லத்தீன் எழுத்தாளர்களால் (சிசரோ, விர்ஜில் முதலிய) எட்டு நிகழ்வுகளில் பயன்படுத்தப்பட்டது. இந்த வார்த்தை பொதுவாக "சிறகுகள் கொண்ட செருப்புகள்" என்று பொருள்படும், மேலும் கடவுள் எர்மெசு/மெர்குரி அல்லது பெர்சியசு அணியும் பாதணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[2]

இடைக்கால குறிப்புகளில் வேகமாக ஓடக்கூடியவரான அட்லான்டா (ஓவிட்) அணிந்திருந்த தலாரியா "கணுக்கால் வரை அடையும் நீண்ட அங்கிகள்" எனக் கூறப்படுகிறது. இந்த விளக்கம் 14 ஆம் நூற்றாண்டில் பிளானூட்சு மற்றும் 17 ஆம் நூற்றாண்டில் நிக்கோலாசு ஹெய்ன்சியசு, மேலும் 19 ஆம் நூற்றாண்டில் லூயிசு மற்றும் சார்ட்டின் ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இந்த "உடைகள்" விளக்கத்திற்கு எதிராக நம்பிக்கையற்ற காரணங்கள் உள்ளன, ஏனெனில் ஓவிட், கால்-பந்தயத்தில் ஈடுபடுவதற்காக அட்லாண்டா இவற்றை அவிழ்த்துவிட்டதாக தெளிவாகக் கூறுகிறார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Homer, Odyssey, V, 44.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Anderson (1966).
  3. Hesiod, Shield of Heracles, 220.
  4. Freedman (2014–2015).
  5. Orphic Hymn 28, v. 4
  6. Gaius Julius Hyginus, Fables (LXIV) and Nonnus, Dionysiaca, (XIV, 270).
  7. Aeschylus, The Phorkides, fr. 262 iv, v Radt.
  8. Pherecydes, 3F11 Fragmente der griechischen Historiker, and the Bibliotheca (Pseudo-Apollodorus), II, 4, 2.

 நூல் பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலாரியா&oldid=3902449" இலிருந்து மீள்விக்கப்பட்டது