தர்வாசா
தர்வாசா Derweze | |
---|---|
நாடு | ![]() |
மாகாணம் | அகால் மாகாணம் |
மக்கள்தொகை (1989 கணக்கெடுப்பு) | |
• மொத்தம் | 1,683 |
தர்வாசா (Derweze அல்லது Darvaza, பொருள்: கதவு) துருக்மேனிஸ்தான் நாட்டின் காராக்கும் பாலைவனத்தின் நடுவே அமையப் பெற்றுள்ள ஒரு கிராமம் ஆகும். இது துருக்மேனிஸ்தான் தலைநகர் அசுகாபாதுக்கு வடக்கே 260 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் பெரும்பாலும் நாடோடி இனமான டெகே குல மக்கள் குடி பெயர்ந்துள்ளனர்.
எண்ணெய்க் கிணறு
[தொகு]
இங்கு இயற்கை எரிவாயு அதிக அளவில் இருப்பதைக் கண்டறிந்த சோவியத் புவியியல் நிபுணர்கள், 1971 ஆம் ஆண்டு துளைக்க துவங்கினர்.[1] அப்போது நிலம் தகர்ந்து விழுந்ததில், 230 அடி விட்டத்திற்கு துவாரம் உருவானது. நச்சு வாயு பரவாமல் தடுக்க திட்டமிட்ட அறிவியலாளர்கள், அந்த துவாரத்தில் தீ வைக்க முடிவெடுத்தனர்.[2] சில நாட்களில் எரிவாயு தீர்ந்து தீ சுடர் அணையும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இன்று வரை தீ சுவாலை எரிந்து கொண்டிருக்கிறது.[3]
உள்ளூர் வாசிகள் இதை நரகத்தின் கதவு என குறிப்பிடுகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Daily Mail article with photos
- Photos from the Darvaza Gas Crater or "Gates of Hell" பரணிடப்பட்டது 2011-09-16 at the வந்தவழி இயந்திரம்
- Tourist information for Darvaza
- யூடியூபில் Flaming Crater, Darvaza Turkmenistan 1/6 - Phillips Connor
- Pictures and YouTube link
- Interactive forum about the Darwaza Well பரணிடப்பட்டது 2011-05-21 at the வந்தவழி இயந்திரம்