தராவர் கோட்டை
ஆள்கூறுகள்: 28°46′2.2″N 71°20′1.9″E / 28.767278°N 71.333861°E
தராவர் கோட்டை (Derawar Fort) (உருது: قلعہ دراوڑ) தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின், பகவல்பூர் மாவட்டத்தில் உள்ள சோலிஸ்தான் பாலைவனத்தில் அமைந்துள்ள பதினோறு கோட்டைகளில் பெரியதும், மிகவும் புகழ் பெற்றதும் ஆகும்.
இக்கோட்டைச் சுற்றுச் சுவர்களின் சுற்றளவு 1500 மீட்டர்களும், உயரம் முப்பது மீட்டரும் கொண்டது. நீண்ட சதுர வடிவிலான இக்கோட்டையின் மீதுள்ள நாற்பது காவல் கோபுரங்களை (கொத்தளம்) பாலவனத்திலிருந்து பல கிலோ மீட்டர் தொலவிலிருந்தும் சாதராணமாக காணலாம்.
வரலாறு[தொகு]
தராவர் கோட்டையை இராஜபுத்திர நிர்வாகியும், பட்டி குலத்தவரான இராய் ஜஜ்ஜா என்பவரால் கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, [1] தால்த்துருவா நகரத்தை தலைநகராகக் கொண்ட ஜெய்சல்மேர் மற்றும் பகவல்பூர் பகுதியின் மாமன்னர் ராவல் தேவராஜ் பட்டிக்கு அர்பணிக்கப்பட்டது.[2]இக்கோட்டையைத் துவக்கத்தில் தேரா ரவார் என அழைக்கப்பட்டது. பின்னர் மருவி தற்போது தராவர் என அழைக்கப்படுகிறது.[2]
இந்தியாவில் கம்பெனி ஆட்சியின் ஆட்சியின் போது, கி பி பதினெட்டாம் நூற்றாண்டில் தராவார் கோட்டையை, பகவல்பூர் சுதேச சமஸ்தான நவாப் கைப்பற்றினார்.
உலகப் பாரம்பரியக் களம்[தொகு]
சோலிஸ்தான் பாலைவனத்தின் இதயமாக விளங்கும் தராவர் கோட்டையை, உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கக் கோரி ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்திற்கு (யுனெஸ்கோ) பாகிஸ்தான் அரசு கோரிக்கை வைத்துள்ளது. [3]
படக்காட்சிகள்[தொகு]
தராவர் கோட்டையின் காட்சிகள்