தரம்பால் லக்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தரம்பால் லக்ரா
பதவியில் உள்ளார்
பதவியில்
பிப்ரவரி 2020
முன்னையவர்சிக்பீர் சிங் தலால்
தொகுதிமுண்டுகா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி

தரம்பால் லக்ரா (Dharampal Lakra) தில்லியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். பிப்ரவரி 2020-இல் அவர் முண்டுகா சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தில்லியின் ஏழாவது சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

லக்ரா முன்பு இந்திய தேசிய காங்கிரசின் உள்ளூர் அலுவலகப் பொறுப்பாளராக இருந்தார். இவர் 2014ஆம் ஆண்டு இ.தே.கா. கட்சியிலிருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.[1]

வாழ்க்கை[தொகு]

லக்ரா முண்டுகாவைச் சேர்ந்த தொழிலதிபர். இவர் தன்னை ஒரு விவசாயவாதி என்றும் இந்திய உணவுக் கழகத்தின் உறுப்பினர் என்றும் வர்ணித்துள்ளார். 2020 சட்டப் பேரவைத் தேர்தலில், 300 கோடி ரூபாய் சொத்துக்களுடன் இவர் பணக்கார வேட்பாளராகக் குறிப்பிடப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரம்பால்_லக்ரா&oldid=3895235" இலிருந்து மீள்விக்கப்பட்டது