தயோகார்பனிலைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
என்,என்′-டைபீனைல்தயோயூரியா | |
வேறு பெயர்கள்
1,3-டைபீனைல்தயோயூரியா
இருபீனைல்தயோயூரியா 1,3-இருபீனைல்l-2-தயோயூரியா சல்போகார்பனிலைடு | |
இனங்காட்டிகள் | |
102-08-9 | |
ChEMBL | ChEMBL275260 |
ChemSpider | 610932 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 700999 |
| |
UNII | 9YCB5VR86Z |
பண்புகள் | |
C13H12N2S | |
வாய்ப்பாட்டு எடை | 228.312 கி/மோல் |
தோற்றம் | வெண் தூள் |
அடர்த்தி | 1.32 கி/செ.மீ3 |
உருகுநிலை | 154.5 °C (310.1 °F; 427.6 K) |
கொதிநிலை | சிதைவடையும் |
நீரில் சிறிதளவு கரையும் | |
கரைதிறன் | எத்தனால், டை எத்தில் ஈதர், குளோரோபாரம் ஆகியவற்றில் நன்கு கரையும்[1] |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 164.7 °C (328.5 °F; 437.8 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயோகார்பனிலைடு (Thiocarbanilide) என்பது C6H5NH)2CS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். கரிம வேதியியல் சேர்மமான இது தயோயூரியாவின் வழிப்பெறுதியாக வெண்மை நிறத்துடன் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. அனிலினுடன் கார்பன் டை சல்பைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து தயோகார்பனிலைடு தயாரிக்கப்படுகிறது.
பயன்கள்
[தொகு]தயோகார்பனிலைடு பொதுவாக இரப்பர் கந்தகமூட்டலுக்கான முடுக்கியாகவும்,[2] பாலி வினைல் குளோரைடு மற்றும் பாலிவினைலிடின்குளோரைடுகளின் நிலைப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. கந்தகமூட்டல் முடுக்கியாக இதன் பயன்பாடு பிஎப் குட்ரிச்சு நிறுவன வேதியியலாளர் சியார்ச்சு ஓன்சுலேகர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[3]
நச்சு
[தொகு]தயோகார்பனிலைடு சேர்மத்தின் எலிகளுக்கான உயிர்க்கொல்லும் அளவு கிலோகிராமுக்கு 50 மில்லி கிராம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, Florida: CRC Press, pp. 3–242, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
- ↑ Hans-Wilhelm Engels, Herrmann-Josef Weidenhaupt, Manfred Pieroth, Werner Hofmann, Karl-Hans Menting, Thomas Mergenhagen, Ralf Schmoll, Stefan Uhrlandt "Rubber, 4. Chemicals and Additives" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2004, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a23_365.pub2
- ↑ Trumbull, H. L. (1933). "Accomplishments of the Medalist". Ind. Eng. Chem. 25 (2): 230–232. doi:10.1021/ie50278a030.