உள்ளடக்கத்துக்குச் செல்

தம்பெலினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"தம்பெலினா"
வில்ஹெல்ம் பெடர்சனின் விளக்கப்படம்,
ஆண்டர்சனின் முதல் சித்திரப் படம்
ஆசிரியர்ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்
தொடக்கத் தலைப்பு"தாமெலீசு"
மொழிபெயர்ப்பாளர்மேரி கோவிட்
நாடுடென்மார்க்
மொழிடேனிஷ் மொழி
வகை(கள்)விசித்திரக் கதைகள்
வெளியிடப்பட்ட காலம்'குழந்தைகளுக்கான விசித்திரக் கதைகள், இரண்டாவது தொகுப்பு. 1835.[1]
பதிப்பு வகைவிசித்திரக் கதைகளின் தொகுப்பு
வெளியீட்டாளர்சி.ஏ. இரெயிட்செல்
ஊடக வகைஅச்சு
வெளியிட்ட நாள்16 திசம்பர் 1835
ஆங்கிலப் பதிப்பு1846
முன்னையது"இலிட்டில் இடாஸ் பிளவர்ஸ்"
பின்னையது"தி நாட்டி பாய்"

தம்பெலினா (Thumbelina, டேனிய மொழி: Tommelise) என்பது டேனிஷ் எழுத்தாளர் ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் எழுதிய ஒரு இலக்கிய விசித்திரக் கதையாகும்.[2] இது முதன்முதலில் 16 திசம்பர் 1835 அன்று சி.ஏ. ரீட்ஸல் என்பவரால் டென்மார்க்கின் கோபனாவனில் வெளியிடப்பட்டது.[3] "தி நாட்டி பாய்" , "தி டிராவலிங் கம்பானியன்" போன்ற சிறுகதைகளுடன் சேர்ந்து 'குழந்தைகளுக்கான விசித்திரக் கதைகள்' என்ற நூலின் இரண்டாவது பாகத்தில் இடம்பெற்றது. இது தம்பெலினா என்ற ஒரு சிறிய பெண்ணைப் பற்றியது. தன் மகனுக்கு அவளை திருமணம் செய்ய விரும்பும் ஒரு தேரை, சேவல்களுடன் அவள் மேற்கொள்ளும் சாகசங்களைப் பற்றிய கதை இது.

தம்பெலினா முக்கியமாக ஆண்டர்சனின் படைப்பு. இருப்பினும் அவர் " டாம் தம்ப் " போன்ற குள்ள மனிதர்களின் கதைகளிலிருந்து உத்வேகம் பெற்றார். தம்பெலினா 1835 ஆம் ஆண்டில் ஏழு விசித்திரக் கதைகளில் ஒன்றாக வெளியிடப்பட்டது. இது டேனிஷ் விமர்சகர்களால் இதன் முறைசாரா பாணியாலும், ஒழுக்கமின்மையாலும் வரவேற்கப்படவில்லை. இருப்பினும், ஒரு விமர்சகர் தம்பெலினாவை பாராட்டினார்.[4] தம்பெலினாவின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு 1846-இல் வெளியானது. இந்தக் கதை தொலைக்காட்சி நாடகம் மற்றும் இயங்குபடம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களுக்கு மாற்றியமைக்கப்பட்டது.

கதை[தொகு]

ஒரு குழந்தைக்காக ஏங்குகிற ஒரு பெண், ஒரு சூனியக்காரரிடம் ஆலோசனை கேட்கிறாள். அவளுக்கு ஒரு வாற்கோதுமை வழங்கப்படுகிறது. அதை அவள் வீட்டிற்குச் சென்று தாவரமாக வளர்க்கிறாள் (1847 ஆம் ஆண்டின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பில் மேரி ஹோவிட் எழுதியது, ஒரு பிச்சைப் பெண் ஒரு விவசாயியின் மனைவியிடம் கொடுப்பதன் மூலம் கதை ஆரம்பிக்கிறது. இங்கே உணவுக்கு ஈடாக ஒரு வாற்கோதுமை). 'வாற்கோதுமை' நடப்பட்டு முளைத்த பிறகு, தம்பெலினா என்ற ஒரு சிறுமி அதன் பூவிலிருந்து வெளிப்படுகிறாள். ஒரு இரவு, தம்பெலினா, தனது வாதுமைக் கொட்டை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறாள். தன் மகனுக்கு திருமணம் செய்ய விரும்பும் ஒரு தேரையால் தம்பெலினா தூக்கிச் செல்லப்படுகிறாள். நட்பான மீன், ஒரு பட்டாம்பூச்சியின் உதவியுடன், தம்பெலினா தேரை மற்றும் அவரது மகனிடமிருந்துத் தப்பித்து, ஒரு லில்லி தண்டு மீது விழுகிறாள். பின்னர் அவளது நண்பர்கள் அவளை நிராகரிக்கிறார்கள்.

தம்பெலினா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறாள். ஆனால் குளிர்காலம் வரும்போது, அவள் மிகுந்த சிரமத்தில் இருக்கிறாள். இறுதியாக அவளுக்கு ஒரு வயதான மர எலி மூலம் தங்குமிடம் கிடைக்கிறது. அதற்கு நன்றியாக அவள் அங்கேயே வசிக்கிறாள். தம்பெலினா தனது அண்டை வீட்டில் வசிக்கும் மோலை திருமணம் செய்து கொள்ளுமாறு எலி அறிவுறுத்துகிறது. ஆனால், தம்பெலினா அத்தகைய ஒரு உயிரினத்தை திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்பைக் மறுக்கிறாள். ஏனெனில் மோல் தனது எல்லா நாட்களையும் நிலத்தடியில் கழிக்கிறது. சூரியனையும் வானத்தையும் ஒருபோதும் பார்க்காது. மர எலியானது தம்பெலினாவை திருமணத்திற்கு மீண்டும் வற்புறுத்துகிறது. மோல் அவளுக்கு ஒரு நல்ல பொருத்தம் என்றும், மறக்காமல் அதனை திருமணம் செய்து கொள்ளவும் கூறுகிறது.

கடைசி நிமிடத்தில், தம்பெலினா ஒரு குளிர்காலத்தில் ஒரு குருவியின் உதவியுடன் தொலைதூர நிலத்திற்கு தப்பிச் செல்கிறாள். மலர்கள் நிறைந்த ஒரு வயலில், தம்பெலினா ஒரு சிறிய மலர்-தேவதை இளவரசனை சந்திக்கிறாள். அவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். அவள் தனது கணவருடனான ஒரு மலரிலிருந்து மற்றொறு மலருக்குப் பயணம் செய்யும்போது இரண்டு இறக்கைகளையும், மியா என்ற புதிய பெயரையும் பெறுகிறாள். இவ்வாறு தம்பெலினாவின் கதையை ஆண்டர்சன் என்ற ஒரு மனிதரிடம் கூறுகிறார். அவர் ஒரு புத்தகத்தில் இக்கதையை விவரிக்கிறார்.[5][6]

குறிப்புகள்[தொகு]

  1. Eastman, Mary Huse (ed.). Index to Fairy Tales, Myths and Legends. BiblioLife, LLC.
  2. Andersen, Hans Christian (2008). Tatar, Maria (ed.). The Annotated Hans Christian Andersen. New York: W.W. Norton. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780393060812.
  3. Andersen, Hans Christian (1983) [1974]. The Complete Fairy Tales and Stories. Translated by Haugaard, Erik Christian. New York, NY: Anchor Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-18951-6.
  4. Wullschlager 2002, p. 165
  5. Opie & Opie 1974, ப. 221–9
  6. Siegel 1992, ப. 123,126

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தம்பெலினா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பெலினா&oldid=3698024" இலிருந்து மீள்விக்கப்பட்டது