தமோர் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமோர் ஆறு நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பெரிய ஆறாகும். இது கஞ்சன்ஜங்கா மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தி ஆகிறது. தமோர் ஆறும், அருண் ஆறும் திரிவேணி படித்துறையில் உள்ள சன் கோசி ஆற்றுடன் இணைந்து மாபெரும் சப்தகோசி ஆறாக உருவெடுத்து மகாபாரத மலைத்தொடரின் வழியாக கங்கை சமவெளியில் பாய்கிறது.[1]

கோசி நதி அமைப்பு[தொகு]

கிழக்கு நேபாளத்தில் கோசி ஆற்றின் வடிநிலப்பகுதிகள் அமைந்துள்ளன. ஏழு ஆறுகள் கிழக்கு-மத்திய நேபாளத்தில் இணைந்து இந்த நதியை உருவாக்குவதால் இது சப்தகோசி என்று அழைக்கப்படுகிறது. கோசி ஆற்றமைப்பை உருவாக்கும் முக்கிய ஆறுகளாவன, சன் கோசி, இந்திராவதி ஆறு, போட் கோசி, துத் கோசி, அருண் ஆறு, பருன் ஆறு மற்றும் தமோர் ஆறு. இவ்வாறு ஒருங்கிணைந்த ஆறானது சத்ரா பள்ளத்தாக்கு வழியாக தெற்கு திசை நோக்கி வெளியேறி இந்தியச் சமவெளிக்குள் பாய்கிறது.[2][3]

சப்த கோசி ஆற்றின் மொத்த நீரில் 44 சதவீதத்தை சன் கோசியும், அருண் ஆறு 37 சதவீதமும், தமோர் ஆறு 19 சதவீதமும் பங்களிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "a complete guide to Nepal's rivers". Sun Koshi river trip. . பார்க்கப்பட்ட நாள் 2010-05-14.
  2. Negi, Sharad Singh (1991). Himalayan rivers, lakes and glaciers. Indus. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185182612. https://books.google.com/books?id=5YtUShKY8zcC&q=Himalayan+rivers+Negi+Sun+kosi&pg=PA89. பார்த்த நாள்: 2010-05-14. 
  3. Bahadur, Jagdish (2004). Himalayan snow and glaciers: associated environmental problems, progress. Concept Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788180690914. https://books.google.com/books?id=fgxQSBwOe0QC&q=Sunkosi+Barun&pg=PA90. பார்த்த நாள்: 2010-05-14. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமோர்_ஆறு&oldid=3816685" இலிருந்து மீள்விக்கப்பட்டது