உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு நாட்டின் பண்பாடு, நாகரிகம், கலைத்திறம் என்பனவும் விளையாட்டால் புலப்படும். நம் மண்ணின் வளம் விளையாட்டுகளாலும் புலப்படும் என்பதால் அதனைக் காக்கக் கருதிய பாவாணர் தமிழ்நாட்டு விளையாட்டுகள் என எழுதினார். செந்தமிழ்ச் செல்வியில் கட்டுரைகளாக வந்து, 1962-இல் கழக வெளியீடு752 ஆக நூலாக்கம் பெற்றது.

முகவுரை

[தொகு]

இந்நூலில் பாவாணர் எழுதிய முகவுரையில் சில.விளை என்றால் விருப்பு என்றும், ஆட்டு என்றால் ஆட்டம் பொருளாகும். எனவே, விரும்பியாடும் ஆட்டு, விளையாட்டு என்றானது.விரும்பப்படுதல், செயற்கெளிமை, இன்பந்தரல் ஆகிய மூன்றும் விளையாட்டின் இயல்பாகும்.விளையாட்டால் ஒருவர்க்கு உடலுரம், உள்ளக் கிளர்ச்சி, மறப்பண்பு, மதிவன்மை, கூட்டுறவுத் திறம், வாழ்நாள் நீட்டிப்பு முதலியன உண்டாகின்றன. இக்காலத்தில் சிலர்க்கு, 'கரும்பு தின்னக் கூலி போல்' விளையாட்டால் பிழைப்பு வழியும் ஏற்படுகின்றது.

நூற்குறிப்பு

[தொகு]

இந்நூலின் பக்கங்கள் 144.

  • ஆண்பாற் பகுதி
  • பெண்பாற்பகுதி
  • இருபாற் பகுதி என முப்பகுதிகளைக் கொண்ட இது. எனினும், குழந்தைப் பக்கம், பெரியோர் பக்கம் என்பனவும் சொல்லப்படுகின்றன.
  • பகலாட்டு,இரவாட்டு, இருமொழுதாட்டு என்பனவற்றுடன் வழக்கற்ற விளையாட்டுகள், பள்ளிக்கூட விளையாட்டுகள், பண்டை விளையாட்டு விழாக்கள் என்னும் பின்னிணைப்பையும் கொண்டது.

அம்முப்பகுதிகள் வருமாறு;-

ஆண்பாற் பகுதி

[தொகு]
  • அகவை 5 முதல் 25 வரை
  • பகலாட்டு = பகலில் விளையாடப்படும் விளையாட்டுகள் பத்து.
  1. கோலி
  2. ஃதெல்
  3. சில்லாங்குச்சு
  4. பந்து
  5. மரக்குரங்கு
  6. 'காயா பழமா?'
  7. பஞ்சு வெட்டுங் கம்படோ
  8. குச்சு விளையாட்டு
  9. பம்பரம்

1.ஓயாக்கட்டை 2.உடைத்தகட்டை 3.பம்பரக்குத்து 4.இருவட்டக்குத்து 5.தலையாரி

  1. பட்டம்
  • இரவாட்டு = இரவில் விளையாடப்படும் விளையாட்டுகள் மூன்று.
  1. குதிரைக்குக் காணங்கட்டல்
  2. வண்ணான்தாழி
  3. சூ விளையாட்டு
  • இருபொழுதாட்டு = இரவு, பகல் என்ற இரண்டு பொழுதுகளிலும் விளையாடப்படும் விளையாட்டுகள் எட்டு.
  1. கிளித்திட்டு
  2. பாரிக்கோடு
  3. அணிற்பிள்ளை
  4. சடுகுடு
  5. கால்தூக்குகிற கணக்கப்பிள்ளை
  6. பூக்குதிரை
  7. பச்சைக்குதிரை
  8. குதிரைச் சில்லி

பெண்பாற்பகுதி

[தொகு]
  • பகலாட்டு என மூன்று விளையாட்டுகள் குறிப்பிடப்படுகின்றன.
  1. தட்டாங்கல்

(மூன்றாங்கல்,ஐந்தாங்கல்,ஏழாங்கல்,பலநாலொருகல்,பன்னிருகல்,பலகல்,பதினாறங்கல்)

  1. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
  2. குறிஞ்சி (குஞ்சி)
  • இரவாட்டு என மூன்று விளையாட்டுகள் குறிப்பிடப் படுகின்றன.
  1. பாக்குவெட்டியைக் காணோமே
  2. நிலாக் குப்பல்
  3. பன்னீர்க்குளத்தில் முழுகுதல்
  • இருபொழுதாட்டு என ஐந்து விளையாட்டுகள் குறிப்பிடப்படுகின்றன.
  1. ஒரு குடம் தண்ணீர் ஊற்றி
  2. என் உலக்கை குத்துக் குத்து
  3. ஊதாமணி
  4. பூப்பறித்து வருகிறோம்
  5. தண்ணீர் சேந்துகிறது

இருபாற் பகுதி

[தொகு]
  • பகலாட்டு
  1. பண்ணாங்குழி
  2. பாண்டி கம்ப விளையாட்டு
  3. கச்சக்காய்ச்சில்லி
  4. குஞ்சு
  • இரவாட்டு
  1. கண்ணாம்பொத்தி
  2. புகையிலைக் கட்டை யுருட்டல்
  3. புகையிலைக் கட்டையெடுத்தல்
  4. பூச்சி
  5. அரசனும் தோட்டமும்
  6. குலைகுலையாய் முந்திரிக்காய்
  • இரு பொழுதாட்டு
  1. நொண்டி
  2. நின்றால் பிடித்துக்கொள்
  3. பருப்புச் சட்டி
  4. மோதிரம் வைத்தல்
  5. புலியும் ஆடும்
  6. இதென்ன மூட்டை
  7. கும்மி

குழந்தைப்பக்கம்: இருபொழுதாட்டு 1.சோறு கொண்டு போகிற வழியிலே 2.அட்டலங்காய் புட்டலங்காய்

பெரியோர் பக்கம்:

1.ஆண்பாற் பகுதி:

 அ.பகலாட்டு - தாயம்
 ஆ.இரவாட்டு - கழியல்
 இ.இருபொழுதாட்டு - முக்குழியாட்டம்

2.பெண்பாற்பகுதி:

 அ.பகலாட்டு -  
    பண்ணாங்குழி,தாயம், 
 ஆ.இருபொழுதாட்டு
    கும்மி

நூலின் சிறப்புகள்

[தொகு]
  • விளையாட்டே எனினும் பருவம், நேரம், இடம் என்பன கொண்டு வகுத்துக் காட்டப்பட்டுள்ளது.
  • ஒவ்வோராட்டமும் இன்ன நாட்டு அல்லது வட்டாரத்து முறை என்றும், ஒரே ஆட்டம் பல்வேறு வகையாய் ஆடப்படின், அவை ஆடும் வகையும், அதற்குரிய வட்டாரமும் சுட்டப்படுகின்றன.
    • பாண்டி நாட்டுச் சில்லாங்குச்சும், சோழ நாட்டுக் கில்லித்தண்டும், கிட்டிப்புள் என்ற மூன்றும் ஒன்றெனக் கூறியுள்ளார்.
  • ஆட்டின் பெயர், ஆடுவார் தொகை, ஆடுகருவி, ஆடிடம், ஆடுமுறை, ஆட்டுத் தோற்றம் என்னும் உட்பகுப்புகளோடு ஊன்றுதலுடன் விளக்கப்பட்டுள்ளன.

ஆடுமுறையின் ஐயம் அகற்றுபவை

[தொகு]
  • ஆடுதலைக் குறித்த பதின்வகை விளக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.
  1. கட்சி பிரித்தல்
  2. தொடங்கும் கட்சியைத் துணிதல்
  3. இடைநிறுத்தல்
  4. தோல்வித் தண்டனை
  5. ஆடைதொடல் கணக்கன்மை
  6. தவற்றால் ஆடகர் மாறல்
  7. வென்றவர்க்கு மறு ஆட்டவசதி
  8. இடத்திற்கு ஏற்ப வேறுபடல்
  9. ஆட்டைத்தொகை வரம்பின்மை
  10. நடுநிலை

சில பக்கங்கள்

[தொகு]

இந்நூலின் சில பக்கங்களும், அங்குள்ள மேற்கோள்களும், கீழே குறிப்பிடப்படுகின்றன.

  • (பக்கம்-14) 'இடுக்கண் வருங்கால் நகுக' - திருக்குறள்
  • (பக்கம்-39) 'ஒருவன் ஆடினால் பட்டம், அது பொழுதுபோக்கு. இருவர் ஆடினால் அது, விளையாட்டு' என வேறுபாடு காட்டுகிறார்
  • 'நாடு கண்டன்ன கணைதுஞ்சு விலங்கல்' - பதிற்றுப்பத்து
  • (பக்கம்-50) 'கிளிமிரீஇய வியன்புனம்' - புறப்பாட்டு
  • (பக்கம்136) 'நாயும் பலகையும்' - தொல்காப்பியம்
  • அச்சுப்பூட்டி ஆடுதல் என இராட்டிலர் அகராதி குறித்தலையும் விளக்கம் இல்லாமல் கூறுகிறார்.
  • அறியப்படாதவை - சாழல், தெள்ளேணம். இவைகளை மகளிர் பாடி ஆடுவதாக மணிவாசகர் குறித்தார்.
    • சாழல் - ஒருவர் கூற்றை ஒருவர் மறுத்துரைத்தல். (எ.கா) 'அவரை அவர் சாடு சாடு எனச் சாடிவிட்டார்.'
    • தெள்ளேணம் - தெள்ளுதல், நாவுதல், புடைத்தல், கொழித்தல் முதலியன அரிசி ஆக்கும் மகளிர் முறச்செயல்கள் ஆகும். குறுநொய்யையும்,மணியையும் பிரிக்கத் தெள்ளுவர். தெள்ளுங்கால் முறத்தின் முகப்பு மேலே தூக்கியிருக்கும். அஃது ஏணம் (உயர்வு) ஆகும். பாடிச் செய்யும் செயலே ஆடலாக எண்ணப்பட்டது போலும்.
  • விளையாட்டும் பண்டை விளையாட்டு விழாக்களாகக் கூறப்பட்டுள்ளன. ஆடல் பாடல் பண்பாடு ஆகிய எல்லாமும் தழுவிய பொருள்ளதே தமிழ்.