தமராக்கி

ஆள்கூறுகள்: 9°55′14″N 78°23′08″E / 9.9206204°N 78.3856919°E / 9.9206204; 78.3856919
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமராக்கி நாடு
—  கிராமம்  —
தமராக்கி நாடு
இருப்பிடம்: தமராக்கி நாடு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°55′14″N 78°23′08″E / 9.9206204°N 78.3856919°E / 9.9206204; 78.3856919
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

தமராக்கி நாடு (ஆங்கிலம் : Thamarakki nadu ) இது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டத்தில் அமைந்துள்ள ஊர் ஆகும்.[4][5]

பெயர்க் காரணம்[தொகு]

தமர் + ஆக்கி = தமராக்கி
தமர் = தம் சுற்றம்
ஆக்கி = ஆக்கிக் கொள்ளுதல்
எனவே தமராக்கி என்றால், மக்கள் அனைவரையும் தங்களது சுற்றமாக ஆக்கிக் கொள்ளும் உள்ளம் நிறைந்த மக்கள் வாழும் ஊர்.


இது முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்த்த கள்ளர் இன மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும்.,தமராக்கி வடக்கு,தமராக்கி தெற்கு , கள்ளங்குளம் ,காராம்போடை, ஆகிய கிராமங்கள் சேர்ந்தது தமராக்கி நாடு என்று அழைக்கப்படுகிறது. தமராக்கியில் விவசாயம் முக்கிய தொழிலாகும். நெல் மற்றும் கரும்பு முக்கியமாக இங்கு வளர்க்கப்படுகின்றன.இங்கு கபடி வீரர்கள் அதிகம் உள்ளன.சிட்டிசண் கபடி குழு,களம் கண்ட வேங்கை கபடி குழு.

.

திருவிழா[தொகு]

கலிதீர்த்த ௮ய்யனார் மற்றும் ஏழைகாத்தாள் அம்மன் கோவில்கள் மற்றும் கோட்டை கோவில் மந்தை கருப்பண் இங்கு அமைந்துள்ளது. தமராக்கியில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் ௭ருதுகட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். உள்ளூர் பாரம்பரியம் மிகுந்த முளைப்பாரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் நடைபெறும் .

போக்குவரத்து[தொகு]

  • சிவகங்கை-இடையமேலூர்-தமராக்கி நாடு(15 கி.மீ.)
  • மேலூர்-இடையமேலூர்-தமராக்கி நாடு - (25 கி.மீ.)
  • மதுரை- மேலூர்-இடையமேலூர்-தமராக்கி நாடு (45 கி.மீ.)
  • மதுரை -தி௫வாதவூர்-தமராக்கி நாடு (32 கி.மீ.)
  • மதுரை- பூவந்தி-படமாத்தூர்-தமராக்கி நாடு (38 கி.மீ.)
  • மதுரை- பூவந்தி-படமாத்தூர்-சிவகங்கை-இடையமேலூர்-தமராக்கி நாடு (65 கி.மீ.)

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-03-22.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-03-22.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமராக்கி&oldid=3937641" இலிருந்து மீள்விக்கப்பட்டது