தப்பளாம்புளியூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தப்பளாம்புளியூர்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவாரூர்
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
PIN610106
வாகனப் பதிவுTN-50
பக்கத்திலுள்ள நகரம்திருவாரூர்

தப்பளாம்புளியூர் (Thappalampuliyur) என்னும் கிராமம், இந்தியா, தமிழ்நாடு மாநிலம், திருவாரூர் மாவட்டம், திருவாரூரிலிருந்து, தென் கிழக்குத் திசையில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில் உள்ளது. இங்குள்ள சிவன் வியாக்ரபுரீசுவரர் என்றும், பார்வதி தேவி நித்தியக் கல்யாணி அம்மன் என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள சனி பகவான் சந்நிதி புகழ் பெற்றது. வட திசையில் அமைந்திருக்கும் ஏக பத்த ருத்ரர் சந்நிதியானது மற்றுமொரு சிறப்பாகும். இக்கோவிலின் முன்புறத்தில் ஒரு பெரிய குளம் உள்ளது.

அதுபோல், இக்கிராமத்தின் மேற்குப் புறமாக அமையப்பெற்றுள்ள வரதராசப் பெருமாள் திருக்கோவில் வைணவத் திருத்தலமாக உள்ளது. ஆனி மாதத்தில் இங்கு நடைபெறும் கொழுந்தாளம்மன் கோவில் திருவிழாவானது சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனிச்சிறப்பு மிக்கதாக விளங்கி வருகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://sites.google.com/site/thappalampuliyur/
"https://ta.wikipedia.org/w/index.php?title=தப்பளாம்புளியூர்&oldid=2761314" இருந்து மீள்விக்கப்பட்டது