உள்ளடக்கத்துக்குச் செல்

தனி ராம் சத்ரிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனி ராம் சத்திரிக்
தனி ராம் சத்திரிக்கின் உருவப்படம்
தனி ராம் சத்திரிக்கின் உருவப்படம்
பிறப்பு(1876-10-04)4 அக்டோபர் 1876
சேய்க்குப்புரா, பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)
இறப்பு18 திசம்பர் 1954(1954-12-18) (அகவை 78)
மொழிபஞ்சாபி
தேசியம்இந்தியர்
கல்விலோபோக்கு, பதோனியல்லி மற்றும் இஸ்லாமிய பள்ளி, அமிருதசரசு[1]

தனி ராம் சத்ரிக் (4 அக்டோபர் 1876 - 18 டிசம்பர் 1954) ஒரு இந்திய கவிஞரும் அச்சுக்கலைஞரும் ஆவார். [1] [2]

நவீன பஞ்சாபி கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் பஞ்சாபி கலாச்சாரம், மொழி மற்றும் புத்தகவெளியீடுகளை மேம்படுத்தினார். 1926இல், பஞ்சாபி இலக்கிய சங்கமான பஞ்சாபி சாஹித்து சபாவின் தலைவர் ஆனார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

அவர் தற்பொழுது பாகிஸ்தானில் உள்ள சேய்க்குபுரா மாவட்டத்தில் பாசியன்-வாலா கிராமத்தில் பிறந்தார்.[3] அவரது தந்தை போஹு லால்[3] சாதரணமான ஒரு கடைக்காரராக இருந்தார்.[4] அவரது தந்தை வேலை தேடி லோபோக்கு கிராமத்துக்கு சென்றார். தந்தையால் அவருக்கு குர்முகி மற்றும் உருது எழுத்துக்கள் கற்பிக்கப்பட்டன.[1] தனி ராமுக்கு [[வனப்பெழுத்து|வனப்பெழுத்தில்]] ஈடுபாடு அதிகமாகவே, அவர் குர்முகி அச்சுக்கலை கற்க பம்பாய் சென்றார்.[1] [3] பிறப்பால் இந்துவாக இருப்பினும், அக்காலத்தின் பிரபல பஞ்சாபி கவிஞரான வீர் சிங்குடன் தொடர்பு கொண்ட பிறகு அவர் சீக்கியமத நம்பிக்கையின் அபிமானி ஆனார்.[1] [3] இந்த சந்திப்பை தொடர்ந்து அவர் பஞ்சாபிமொழி வசனங்களை எழுதத் தான் தூண்டப்பட்டதை உணர்ந்தார்.[1]

நூல் பட்டியலின் ஒரு பகுதி

[தொகு]
  • புலாம் தீ தோக்கரி (1904)
  • பர்த்தரிஹரி (1905)
  • நள-தமயதி (1906)
  • தர்மவீர் (1912)
  • சந்தன்வாடி (1931)
  • கேசர் கியாரி (1940)
  • நவாம் ஜஹாம் (1942)
  • நூர் ஜஹான் பாட்ஷாபேகம் (1944)
  • சூஃபிகானா (1950)

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 அமரேஷ் தத்தா (1988). இந்திய இலக்கிய கலைக்களஞ்சியம், தொகுதி 2, தேவராஜிலிருந்து ஜோதி வரை. இலக்கிய கலைக்கூடம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126011940. இணையக் கணினி நூலக மைய எண் 34346334.
  2. சிசிர் குமார் தாஸ், மற்றும் பலர் (2006). இந்திய இலக்கியத்தின் வரலாறு. இலக்கிய கலைக்கூடம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7201-798-7.
  3. 3.0 3.1 3.2 3.3 சுரிந்தர் சிங் நருலா (1985). தனி ராம் சத்திரிக். இலக்கிய கலைக்கூடம். இணையக் கணினி நூலக மைய எண் 15550036.
  4. Amaresh Datta (1988). Encyclopaedia of Indian literature. vol. 2, Devraj to Jyoti. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126011940. இணையக் கணினி நூலக மைய எண் 34346334.Amaresh Datta (1988). Encyclopaedia of Indian literature. vol. 2, Devraj to Jyoti. Sahitya Akademi. ISBN 9788126011940. OCLC 34346334.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • https://apnaorg.com/translations/chatrik/ வட அமெரிக்க கலைக்கூடத்தால் பிரசுரிக்கப்பட்ட தனி ராம் சத்திரிக்கின் மெலே விட்ச் ஜாட் என்ற கவிதையின் ஆங்கில ஒலிபெயர்ப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனி_ராம்_சத்ரிக்&oldid=3815129" இலிருந்து மீள்விக்கப்பட்டது