உள்ளடக்கத்துக்குச் செல்

தனஞ்சய் சாட்டர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனஞ்சோய் சாட்டர்ஜி (Dhananjoy Chatterjee 14 ஆகஸ்ட் 1965 - 15 ஆகஸ்ட் 2004) 21 ஆம் நூற்றாண்டில் கொலைக்காக இந்தியாவில் நீதித்துறை ரீதியாக தூக்கிலிடப்பட்ட முதல் நபர் ஆவார். இவருக்கு 14 ஆகஸ்ட் 2004 அன்று கொல்கத்தாவின் ஆலிப்பூரா சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது [1][2] 1990 ல் 15 வயது பள்ளி மாணவி எதேல் பரேக் என்பவரை வன்கலவி செய்து கொலை செய்த குற்றத்திற்காக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.[3]

தனஞ்சய் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார் இவரது மரணதண்டனை பொது விவாதங்களை ஏற்படுத்தியது மற்றும் ஊடகங்களின் பரவலான கவனத்தை ஈர்த்தது.[4]

21 ஆகஸ்ட் 1991 முதல் அலிப்பூரா சிறையில் மேற்குவங்கத்தில் தூக்கிலிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.[5][6][7]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

தனஞ்சய் இந்தியாவின் மேற்கு வங்கத்தின் குலுதிஹியில் பிறந்தார் மற்றும் கொல்கத்தாவில் பாதுகாவலராக பணியாற்றினார்.[8] எதேல் பரேக் வழக்கில் கைது செய்யப்படுவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு இவர் பூர்ணிமா எண்பவரைத் திருமணம் செய்து கொண்டார், அவர் ஒரு காவலாளியாகப் பணியில் இருந்த போது தான் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றுவதாக பொய் கூறினார்.[9] பூர்ணிமா ஒரு அங்கன்வாடி பணியாளராக மாதம் ரூ .1200 ஊதியத்துடன் பணிபுரிகிறார். அவரது கணவர் தூக்கிலிடப்பட்ட பிறகு மறுமணம் செய்ய விருப்பமில்லாது அவர் தனது பெற்றோருடன் வாழ்ந்தார்.[10][11]

வழக்கு விவரங்கள்

[தொகு]

எதேல் பரேக், கொல்கத்தாவின், பாவ்பசாரில் உள்ள வெலேண்ட் குட்சுமித் பள்ளியில் பயின்று வந்தார் அவர் தனது பெற்றோர் மற்றும் மூத்த சகோதரருடன் பவானிபூரில் உள்ள ஆனந்த் குடியிருப்பின் மூன்றாவது மாடியில் வசித்து வந்தார். இவர்கள் 1987 இல் இந்த குடியிருப்பில் குடியேறினர். தனஞ்சய் இந்த நிறுவனத்தின் பாதுகாவலராக இருந்தார். அவர் அந்த குடியிருப்பில் சுமார் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.

மார்ச் 5, 1990 அன்று, தனஞ்சய் காலை பணியின் போது (காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை) காவலாளியாக பணி செய்து வந்தார். ஏறக்குறைய காலை 7:30 மணிக்கு எடல் தனது ஐசிஎஸ்இ தேர்வுக்கு புறப்பட்டார். தேர்விற்குப் பிறகு, அவர் வீடு திரும்பினார். பிற்பகலில், அவரும் அவருடைய தாய் மட்டுமே அந்த குடியிருப்பில் இருந்தனர்.

எடலின் தாய் பிற்பகலில் அருகில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்றார். கோவிலில் இருந்து திரும்பிய பிறகு, வீடு பூட்டியிருந்தது.பல முறை கதவினைத் தட்டிய பிறகும் கதவு திறக்கப்படாததால் அருகாமையில் இருந்தோர் கதவினை உடைத்தனர். அங்கு எதேல் இறந்து கிடந்தார்.அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாகக் கூறினர்.

எதேல் கொலை செய்யப்பட்ட பிறகு தனஞ்சய் அந்த பகுதியில் காணப்படவில்லை. எனவே காவல் துறையினருக்கு இவர் மீது சந்தேகம் வலுத்தது. 1990 மே 12 அதிகாலையில் சத்னா, பான்குரா அருகே உள்ள குலுதிஹியில் உள்ள அவரது வீட்டில் இருந்து அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை கொல்கத்தா காவல்துறையின் துப்பறியும் துறை விசாரித்தது. காவல்துறையால் தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் கற்பழிப்பு, கொலை மற்றும் கைக்கடிகாரத்தை திருடியது ஆகிய குற்றச்சாட்டுகள் அடங்கும். அலிப்பூரில் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. கொலைக்கு நேரடியான சாட்சிகள் இல்லாததால், வழக்கு சூழ்நிலை சான்றுகளை மட்டுமே முதன்மையாகக் கொண்டு அனைத்து குற்றங்களுக்கும் தனஞ்சய் முதன்மை குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை விதித்தது பிறகு, கல்கத்தா உயர்நீதிமன்றம் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றம் குற்றத்தையும் மரண தண்டனையும் உறுதி செய்தது.

சான்றுகள்

[தொகு]
 1. "Six convicts in death row in Bengal jails". The Times of India.
 2. "Front Page : Dhananjoy hanged". தி இந்து. 2004-08-15. Archived from the original on 2015-01-28.
 3. "Judgment in the case of Dhananjoy Chatterjee vs. State of West Bengal". A. S. Anand and N. P. Singh, JJ, para 1, page 226. Supreme Court of India. 11 January 1994. Archived from the original on 8 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 1 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 4. "The last hanging took 14 years after rape and murder".
 5. "I hanged my first victim when I was 16". indianexpress.com.
 6. "The Telegraph - Calcutta : Metro". telegraphindia.com.
 7. "Archived copy". பார்க்கப்பட்ட நாள் 2015-01-28.[தொடர்பிழந்த இணைப்பு]
 8. "How India hanged a poor watchman whose guilt was far from established". scroll.in. http://scroll.in/article/741784/how-india-hanged-a-poor-watchman-whose-guilt-was-far-from-established. 
 9. "Dhananjoy's family stood rock-like behind him". Outlook. 15 August 2004. பார்க்கப்பட்ட நாள் 6 March 2020.
 10. "Dhananjoy widow seeks peace". Naresh Jana. The Telegraph. 22 January 2005. பார்க்கப்பட்ட நாள் 6 March 2020.
 11. "A matter of life and death". The Telegraph. 23 August 2005. பார்க்கப்பட்ட நாள் 6 March 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனஞ்சய்_சாட்டர்ஜி&oldid=3741945" இலிருந்து மீள்விக்கப்பட்டது