பவானிபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பவானிபூர்
கொல்கத்தாவின் புறநகர் பகுதி
பவானிபூர் is located in கொல்கத்தா
பவானிபூர்
பவானிபூர்
கொல்கத்தாவில் பவானிபூரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 22°32′02″N 88°20′46″E / 22.534°N 88.346°E / 22.534; 88.346ஆள்கூறுகள்: 22°32′02″N 88°20′46″E / 22.534°N 88.346°E / 22.534; 88.346
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
நகரம்கொல்கத்தா
மாவட்டம்கொல்கத்தா
கொல்கத்தா மெட்ரோஇரபீந்திர சதன், நேதாஜி பவன், ஜதின் தாஸ் பூங்கா
மாநகராட்சிகொல்கத்தா மாநகராட்சி
கொல்கத்தா நகராட்சி வார்டுகள்70, 71, 72, 73,
ஏற்றம்36 ft (11 m)
மக்கள்தொகை
 • மொத்தம்For population see linked KMC ward pages
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்700 020
தொலைபேசி குறியீடு+91 33
மக்களவைத் தொகுதிகொல்கத்தா தெற்கு
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிபபானிபூர்

பவானிபூர் (Bhowanipore ) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா மாவட்டத்தில் தெற்கு கொல்கத்தாவின் புறநகர் பகுதியாகும்.

வரலாறு[தொகு]

இந்தப் பகுதியை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் 1717 ஆம் ஆண்டில் முகலாய பேரரசர் பரூக்சியாரிடமிருந்து தங்களின் குடியிருப்பைச் சுற்றியுள்ள 38 கிராமங்களிலிருந்து வாடகையை வசூலிக்கும் உரிமையைப் பெற்றது. இதில் ஊக்லி இப்போது ஹவுரா மாவட்டமாக உள்ளது. மீதமுள்ள 33 கிராமங்கள் கொல்கத்தாவில் சேர்ந்தன. வங்காளத்தின் முதல் தன்னாட்சி கொண்ட வங்காள நவாபான சிராச் உத் தவ்லாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்த கிராமங்களை 1758இல் மிர் ஜாபரிடமிருந்து கிழக்கிந்திய நிறுவனம் வாங்கி, அவற்றை மறுசீரமைத்தது. இந்த கிராமங்கள் திஹி பஞ்சன்னாகிராம் என என்று அழைக்கப்பட்டன. அவற்றில் பவானிபூரும் ஒன்றாகும். இது மராத்தா அகழியின் எல்லைக்கு அப்பாற்பட்ட ஒரு புறநகராக கருதப்பட்டது.[1][2][3]

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

 • சுபாஷ் சந்திர போஸ்-பிரித்தானிய இந்தியாவின் முன்னணி சுதந்திர போராளிகளில் ஒருவரான பார்வர்ட் பிளாக் மற்றும் இந்திய தேசிய இராணுவத்தின் நிறுவனர்
 • ஹேமந்தா முகர்ஜி-பிரபல பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். தனது இளமை பருவத்தில் கன்சாரி பரா அருகே வசித்து வந்தார். மேலும் பவானிபூர் பகுதியின் மித்ரா நிறுவனத்தின் பள்ளியில் பயின்றார்.
 • உத்தம் குமார்-நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நபர். பெங்காலி திரைப்படங்களின் மறக்க முடியாத நாயகன்
 • அனில் குமார் கெய்ன்-கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் முக்கிய கணிதவியலாளர்,
 • சத்யஜித் ராய்-உலகப் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர்
 • தேசபந்து சித்தரஞ்சன் தாஸ், புகழ்பெற்ற பாரிஸ்டர் மற்றும் சுயாட்சிக் கட்சியின் தலைவர்
 • பிரஜேந்திரநாத் தே-பர்த்வானின் ஆணையர்
 • தருண் குமார், பல்துறை நடிகர், உத்தம்குமாரின் சகோதரர்
 • அசுதோசு முகர்சி-கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்
 • சியாமா பிரசாத் முகர்ஜி-பாரதீய ஜன சங்கத்தின் நிறுவனர் மற்றும் இந்தியாவின் முதல் மத்திய தொழில் அமைச்சர்
 • பிரமேந்திர மித்ரா, ஆசிரியர், கவிஞர்
 • சித்தார்த்த சங்கர் ரே-மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர், பாரிஸ்டர்
 • பிஜோன் பட்டாச்சார்யா-பிரபல நாடக கலைஞர், இயக்குனர், பிரபல பெங்காலி நாடக எழுத்தாளர். மேலும், பிரபல சர்வதேச விருது பெற்ற சமூக சேவகரும் எழுத்தாளருமான மகாசுவேதா தேவியின் கணவர்.
 • ரஞ்சித் மல்லிக், பெங்காலி திரைப்பட நடிகர்.
 • ஹனா கேத்தரின் முல்லென்ஸ் (1826–1861), ஐரோப்பிய மறைப்பணியாளர், கல்வியாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத்தாளர், ஜீனா பயணங்களுக்கு குறிப்பிடத்தக்கவர்
 • அல்போன்ஸ் பிரான்சுவா லாக்ரோயிக்ஸ், மறைப்பணியாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்
 • முன்னா மித்ரா, முதல் தர துடுப்பாட்ட வீரர் மற்றும் ஆங்கிலிகன் மதகுரு

மேற்கோள்கள்[தொகு]

 1. "District Census Handbook Kolkata, Census of India 2011, Series 20, Part XII A". Directorate of Census Operations, West Bengal.
 2. Cotton, H.E.A., Calcutta Old and New, first published 1909/reprint 1980, pages 103-4 and 221, General Printers and Publishers Pvt. Ltd.
 3. Nair, P.Thankappan, The Growth and Development of Old Calcutta, in Calcutta, the Living City, Vol. I, pp. 14-15, Edited by Sukanta Chaudhuri, Oxford University Press, 1995 edition.

விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: கொல்கத்தா/தெற்கு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானிபூர்&oldid=3296783" இருந்து மீள்விக்கப்பட்டது