ஆலிப்பூரா சிறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலிப்பூரா சிறை
Alipore Jail
இடம்ஆலிபூரா, கொல்கத்தா
நிலைஅனைவருக்கும்
பாதுகாப்பு வரையறைஅதிகபட்சம்
கொள்ளளவு2000
திறக்கப்பட்ட ஆண்டு1910
முந்தைய பெயர்{{{former_name}}}

ஆலிப்பூரா சிறை அல்லது அலிப்பூர் மத்திய சிறை (Alipore Jail or Alipore Central Jail ; வங்காள மொழி: আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার) என்பது இந்திய நாட்டின் மேற்குவங்காளா மாநிலத்திலுள்ள கொல்கத்தா நகரின் அலிப்பூரில் அமைந்திருக்கும் மத்திய சிறை ஆகும். பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் சுபாசு சந்திர போசும் கைதியாக இருந்தார். இச்சிறைச்சாலை இன்றும் நன்முறையில் செயல்படுகிறது.[1][2] இச்சிறைச்சாலை வளாகத்தில் அலிப்பூர் சிறை அச்சகம் ஒன்றும் இயங்குகிறது.

அலிப்பூர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் 1908 முதல் 1909 வரை அரவிந்தர் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்தார். இங்கு சிறையிருந்தபோது சுப்ராபாத் என்ற பத்திரிகையில் எண்ணற்ற படைப்புகளை அரவிந்தர் வங்காள மொழியில் எழுதினார். பின்னாளில் இவை ‘’ சிறை வாழ்க்கையின் கதைகள் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. நான் ஓராண்டு சிறை வாழ்க்கையைக் குறித்துப் பேசியிருக்கிறேன். ஓர் ஆசிரமம் அல்லது குடிலில் ஓராண்டுக்கு அமர்ந்திருந்து பேசுவதை விட இவ்விடம் மிகப் பொருத்தமாக இருந்தது என்று பின்னாளில் இவர் குறிப்பிடுகிறார். பிரித்தானிய அரசின் சீற்றம் விளைவித்த ஒரே முடிவு என்னவெனில் நான் கடவுளைக் கண்டேன் என்று அரவிந்தர் குறிப்பிட்டார்.[3]

முக்கியக் கைதிகள் சிலர்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிப்பூரா_சிறை&oldid=3543074" இருந்து மீள்விக்கப்பட்டது