உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சைவாணன் கோவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஞ்சைவாணன் கோவை பொய்யாமொழிப் புலவர் என்பவரால் இயற்றப்பட்ட ஓர் அகப்பொருட்கோவை நூலாகும். இது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்நூல் தற்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தஞ்சாக்கூரில் வாழ்ந்த சந்திரவாணன்[1] என்னும் சிற்றரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது. [2] தஞ்சைவாணன், பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகர பாண்டியனின் படைத் தலைவனாகவும் அமைச்சராகவும் இருந்ததோடு, மாறை என்னும் நாட்டை ஆண்டு வந்ததாகவும் தஞ்சைவாணன் கோவை கூறுகிறது.

நூலமைப்பு

[தொகு]

கோவை நூல்கள் அகப்பொருள் இலக்கியமாகவே எழுதப்படும் மரபுக்கு ஏற்ப இது தலைவன் தலைவியின் அகவாழ்க்கை பற்றியதாக அமைந்துள்ளது. நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் என்னும் இலக்கண நூலை அடியொற்றி இந்த இலக்கியம் படைக்கப்பட்டு இருக்கிறது.[1] ‘ இது,

  1. களவியல்,
  2. வரைவியல்,
  3. கற்பியல்

என்னும் 3 இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று இயல்களிலும் உள்ள 33 பிரிவுகளில் மொத்தம் 425 பாடல்கள் அடங்கியுள்ளன. இவற்றுள், களவியலில், 18 பிரிவுகளில் 280 பாடல்களும், வரைவியலில் 8 பிரிவுகளில் 86 பாடல்களும், கற்பியலில் 7 பிரிவுகளில் 59 பாடல்களும் அடங்குகின்றன. இந்நூல் முழுதும் கட்டளைக் கலித்துறை என்னும் பாவகையில் எழுதப்பட்டுள்ளது.[3]

உள்ளடக்கம்

[தொகு]

தஞ்சைவாணன் கோவை நூலின் உள்ளடக்கம் வருமாறு

இயல்துறைபாடல்களின் எண்ணிக்கைகுறிப்பு
களவியல்01. கைக்கிளை00
02. இயற்கைப் புணர்ச்சி00
03. வன்புறை00
04. தெளிவு00
05. பிரிவுழி மகிழ்ச்சி00
06. பிரிவுழிக் கலங்கல்00
07. இடந்தலைப்பாடு00
08. பாங்கற்கூட்டம்00
09. பாங்கி மதியுடன்பாடு00
10. பாங்கியிற் கூட்டம்00
11. ஒருசார் பகற்குறி00
12. பகற்குறி இடையீடு00
13. இரவுக்குறி00
14. இரவுக்குறி இடையீடு00
15. வரைதல் வேட்கை00
16. வரைவு கடாதல்00
17. ஒருவழித் தணத்தல்00
18. வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிதல்00
வரைவியல்19. வரைவு மலிவு00
20. அறத்தொடு நிற்றல்00
21. உடன்போக்கு00
22. கற்பொடு புணர்ந்த கவ்வை00
23. மீட்சி00
24. தன்மனை வரைதல்00
25. உடன்போக்கு இடையீடு00
26. வரைதல்00
கற்பியல்27. இல்வாழ்க்கை00
28. பரத்தையிற் பிரிவு00
29. ஓதற் பிரிவு00
30. காவற் பிரிவு00
31. தூதிற் பிரிவு00
32. துணைவயிற் பிரிவு00
33. பொருள்வயிற் பிரிவு00

உரை

[தொகு]

இத் தஞ்சைவாணன் கோவைக்கு விளக்கவுரை எழுதியவர் சொக்கப்ப நாவலர். இவர் பிறந்த ஊர், தொண்டை மண்டலத்தைச் சார்ந்த குன்றத்தூர். இவர் சிறந்த தமிழ்ப்புலமையும் நாவன்மையும் பெற்று அட்டாவதானியாக விளக்கம் பெற்றிருந்தனர். இவர் இந் நூலாசிரியரான பொய்யாமொழியார் மரபில் வந்தவர். [4]

சான்றடைவு

[தொகு]
  1. 1 2 தி.தெ.சை.நூ.கழகம் வெளியிட்ட தஞ்சைவாணன் கோவையின் முன்னுரை
  2. சாமிநாதையர் உ.வே, என் சரித்திரம்:அத்தியாயம்-51 சிதம்பரம்பிள்ளையின் கலியாணம்
  3. தஞ்சைவாணன் கோவை
  4. பொய்யாமொழிப் புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவைக்குச் சொக்கப்ப நாவலர் வரைந்த உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சைவாணன்_கோவை&oldid=4429330" இலிருந்து மீள்விக்கப்பட்டது