நாற்கவிராச நம்பி
Jump to navigation
Jump to search
நாற்கவிராச நம்பி என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வாழ்ந்தவர். சமண சமயத்தவரான இவர் பல பாவகைகளையும் திறமையாகப் பாட வல்லவர் என்பதால் இவருக்கு நாற்கவிராசர் என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர் தமிழ், வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் வல்லவராக இருந்தார்.
தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள அகப்பொருள் இலக்கணத்தை விளக்க நம்பி அகப்பொருள் எனப்படும் இலக்கண நூலை இவர் எழுதினார்.