தஞ்சாவூர் வடக்கு அலங்கம் பாலதண்டாயுதபாணிசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தஞ்சாவூர் வடக்கு அலங்கம் பாலதண்டாயுதபாணிசுவாமி கோயில் தஞ்சாவூர் நகரில் வடக்கு அலங்கம் பகுதியில் உள்ள முருகன் கோயிலாகும.

மூலவர்[தொகு]

இங்குள்ள மூலவர் பாலதண்டாயுதபாணி என்றழைக்கப்படுகிறார்.

சிறப்பு[தொகு]

இந்தக் கோயில் மன்னர் சரபோஜி காலத்தில் கட்டப்பட்டதாகும். இப் பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் அடிக்கடி பழனியிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வந்துள்ளனர். அப்படி சென்று வர பல நாட்கள் ஆனதால், அங்கிருப்பது போல இங்கும் ஒரு கோயிலை அமைக்க முடிவு செய்தனர். முருகன் கனவில் வந்து சொன்னதை அடுத்து, பழனி மலையின் அடிவாரத்தில் இருந்து ஒரு முருகன் சிலையை இங்கு கொண்டு வந்து அமைத்துள்ளார்கள்.[1]

தஞ்சாவூர் அறுபடை வீடு[தொகு]

தஞ்சாவூரில் உள்ள அறுபடைவீடுகளாக மேல அலங்கம் முருகன் கோயில் (திருப்பரங்குன்றம்), வடக்கு அலங்கம் முருகன் கோயில் (பழமுதிர்சோலை), குறிச்சித் தெரு முருகன் கோயில் (திருத்தணி), ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெரு முருகன் கோயில் (சுவாமிமலை), சின்ன அரிசிக்காரத் தெரு முருகன் கோயில் (பழனி), பூக்காரத்தெரு முருகன் கோயில் (திருச்செந்தூர்) ஆகியவற்றைக் கூறுகின்றனர்.[2] சுமார் 40 வருடங்களாக இப்பகுதியிலுள்ள முருக பக்தர்கள் ஒரே நாளில் இந்த அனைத்து முருகன் கோயில்களுக்கும் பாத யாத்திரையாகச் சென்று வருகின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]