தஞ்சாவூர் மேல அலங்கம் சுப்பிரமணியர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தஞ்சாவூர் மேல அலங்கம் சுப்பிரமணியர் கோயில் தஞ்சாவூர் நகரில் மேல அலங்கம் பகுதியின் வட புறத்தில் அமைந்துள்ளது.

மூலவர்[தொகு]

இங்குள்ள மூலவர் முருகன் வள்ளி தெய்வானையுடன் நின்ற நிலையில்உள்ளார்.

கோயில் அமைப்பு[தொகு]

கோயிலில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. பலிபீடம், கொடி மரம், மயில் ஆகியவை அடுத்து கருவறை உள்ளது.திருச்சுற்றில் விசுவநாதர், விசாலாட்சி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன.[1]

சிறப்பு[தொகு]

கி.பி.1757ஆம் ஆண்டைச் சேர்ந்த, மராட்டிய மன்னர் பிரதாப சிம்மர் காலத்திய, செப்பேடு இக்கோயிலில் உள்ளது.[1]

தஞ்சாவூர் அறுபடை வீடு[தொகு]

தஞ்சாவூரில் உள்ள அறுபடைவீடுகளாக மேலஅலங்கம் முருகன் கோயில் (திருப்பரங்குன்றம்), வடக்கு அலங்கம் முருகன் கோயில் (பழமுதிர்சோலை), குறிச்சித் தெரு முருகன் கோயில் (திருத்தணி), ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெரு முருகன் கோயில் (சுவாமிமலை), சின்ன அரிசிக்காரத் தெரு முருகன் கோயில் (பழனி), பூக்காரத்தெரு சுப்பிரமணியசுவாமி கோவில் (திருச்செந்தூர்) ஆகியவற்றைக் கூறுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014