உள்ளடக்கத்துக்குச் செல்

தக்கிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தக்கிகள்
1894 இல் தக்கிகள் குழு

கொள்ளைகாரர்கள் அல்லது தக்கிகள் அல்லது தக்கர் ([நேபாளி ठग्गी ṭhaggī] error: {{lang-xx}}: text has italic markup (உதவி); உருது: ٹھگ‎; சமக்கிருதம்: sthaga; சிந்தி மொழி: ٺوڳي، ٺڳ‎; கன்னடம் ಠಕ್ಕ thakka) என்பவர்கள் முறையாக நிர்வகிக்கப்பட்ட அமைப்பை சார்ந்த தொழில் முறை கொள்ளைகாரர்கள் மற்றும் கொலைகாரர் கும்பலாகும். இவர்கள் 600 ஆண்டுகள் இந்திய துணை கண்டம் முழுவதும் குழுக்களாக செயல்பட்டு உள்ளார்கள்.[1] தக்கிகள் ஏழு முஸ்லீம் பழங்குடி மரபினரிலிருந்து தோன்றியதாக கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், இவர்களின் துவக்கக்காலத்தில் இந்துக்களுடனுடனும் தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர். முதன்முதலில் ஜியா-உட்-தின்-பரனியால் (Ẓiyā-ud-Dīn Baranī) 1356 இல் எழுதப்பட்ட ஃபுரூஸ் ஷா வரலாற்றில் இவர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.[2] 1830 களில், தக்கிகள் இந்தியாவின் கவர்னர்-ஜெனரல் வில்லியம் பென்டின்க் மற்றும் அவரது தலைமை தளபதி வில்லியம் ஹென்றி ஸ்லெமான் ஆகியோரின் முயற்சியால் அழிக்கப்பட்டனர்.[1][3]

இவர்கள் முதலில் குறிவைக்கப்பட்ட வணிகப் பயணிகளுடன் பயணிகளைப்போல இடையில் சேர்ந்து கொண்டு அவர்களின் நம்பிக்கையைப் பெற்று பயணித்து; வணிகப் பயணிகளை தகுந்த நேரத்தில் தாக்கி கைகுட்டை அல்லது கயிறுகளையோ கொண்டு, கழுத்தை நெரித்துக் செயலிழக்கவைத்து பணத்தையும் பொருளையும் கொள்ளையடித்து விடுவார்கள், சமயத்தில் ஆட்களையும் கொலை செய்து கிணறுகளில் தள்ளி விடுவார்கள். இந்த தக்கிகளை, அழைக்க தென்னிந்தியாவில் ஃபான்சிகர் என்ற சொல் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.[4] தக்கி (thuggee) என்ற சொல் ஏமாற்றுக்காரன் என்ற பொருள் கொண்ட ठग (ṭhag) என்ற இந்த வார்த்தையில் இருந்து உருவானது. தொடர்புடைய சொற்களான வினைச்சொல் துக்னே ("ஏமாற்றுவதற்கு"), சமஸ்கிருத சொல்லான स्थग (ஸ்தகா "தந்திரமான, கள்ளத்தனமான, மோசடி") மற்றும் स्थगति (ஸ்டாகிதி, "மறைக்கிறார்") என்ற பொருள்களில் உள்ளது.[5] இதே பொருள் தரும் ‘தொங்கா’ என்ற தெலுங்கு வார்த்தை ஏமாற்றுபவன் மற்றும் திருடன் என்ற பொருளில் கையாளபடுகிறது.

வரலாறு

[தொகு]

தோற்றமும் ஆட்சேர்ப்பும்

[தொகு]
Two drawings of an older, bearded man
ஆஜ்மீரைச் சேர்ந்த குரு முல்ரு பைரிகே ஜோகீ, 90 வயதில், சிறையில் (1840)
Sketch of three standing men, of different ages
முர்தான் கான் மற்றும் லக்னோவிலிருந்து கும்பல் (1840)

தக்கி குழுவில் உறுப்பினராகும் உரிமை பெரும்பாலும் பரம்பரை வழியாகவே வழங்கப்பட்டது. இது அல்லாமல் வெளியாட்கள் இதற்கென்று இருந்த குருக்களிடம் பயிற்சி பெற்ற பின்னர் கூட்டத்தில் சேர்த்து கொள்ள பட்டனர். தலைவர் பதவியும் தந்தைக்கு பின்னர் மகனுக்கு என்றே வழங்கபட்டது கொள்ளை அடிப்பது வறுமைக்காக என்று நினைக்காமல் ஒரு தொழிலாகவே பார்க்கப்பட்டு பிரபல கொள்ளையர்களுக்கு பழங்குடி மக்கள் மத்தியில் போர் வீரர்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது.

தக்கிகளின் மதகொள்கை

[தொகு]
Drawing of two men worshiping before a statue
The Thugs Worshipping Kalee, around 1850[6]

தக்கிகள் தாங்கள் காளியின் வேர்வையில் இருந்து பிறந்ததாகவும் காளிக்கும் ரக்த்பிஜா என்ற அசூரனுக்கும் இடையே நடந்த போரிலிருந்து தங்களின் வரலாறு துவங்குவதாகவும் கூறிக்கொண்டனர். பிராமினிய கொள்கைளில் இருந்தும் புராண நம்பிக்கைகளில் இருந்தும் வேறுபட்டனர். காளி தெய்வமே ஆக்க மற்றும் அழிவிற்கும் காரணம் என்றும் தங்களின் வழிப்பறிக்கு பின் மனித உயிர்களை பலியிடுவதினால் காளி சாந்தமடைந்து மனித இனத்தை அழிக்காமல் விடுகிறாள் என்று நம்பினர்.

கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை

[தொகு]
See caption
19 ஆம் நூற்றாண்டின் துவக்கக்காலத்தைச் சேர்ந்த பெயர் தெரியாத கலைஞரின் நீர்வண்ண ஓவியம். ஒரு பயணியை தொந்தரவு செய்யும் மூன்று குண்டர்கள்; ஒருவன் பயணியின் கால்களை பிடித்திருக்கிறான், மற்றொருவன் அவரது கைகளை பிடித்திருக்க, மற்றொருவன் பயணியின் முதுகில் அமுக்கி அவரது கழுத்தை சுற்றி இறுக்குகிறான்.

தாக்கிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையானது பல்வேறு மதிப்பீடுகளில் வெவ்வேறு எண்ணிக்கைகளை அளித்தாலும் தக்ககிகள் செயல்பட்ட கால அளவை உறுதி செய்ய போதிய நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்பதால் கொல்லப்பட்டடவர்களின் எண்ணிக்கையில் வேறுபாடு நிலவுகிறது. கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இரண்டு மில்லியன் பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிடபடுகிறது. பிரித்தானிய வரலாற்று ஆசிரியர் மைக் டேஸ் என்பவற்றின் மதிப்பீட்டின் படி 150 ஆண்டு கால இடை வெளியில் 50,000 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என மதிப்பிடுகிறார். டேவிட் சி ரேப்போர்ட் என்ற அரசியல் நிபுணரின் கருத்து படி ஐந்து லட்சம் பேர் கொல்லபட்டு இருக்கலாம் என்று கருதபட்டு இதுவே வரலாற்றில் ஒரு தனி வன்முறை குழு செய்த அதிகபட்ச கொலைகளாக இருக்ககூடும் என்று நம்மபடுகிறது.[7] மற்ற மதிப்பீடுகளின்படி, அவர்கள் ஒரு மில்லியன் மக்களைக் கொன்றதாக கூறப்படுகிறது.[8]

பிரித்தானியர்களால் ஒடுக்கப்படல்

[தொகு]

தக்கிகள் 1830 களில் பிரித்தானியா அரசால் ஒடுக்க பட்டார்கள்.[9] இதற்காக வில்லியம் ஹென்றி ஸ்லீமன் என்ற ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டார். இவர் எடுத்த பெரும் முயற்சிகளாலேயே தக்கிகள் அழிக்கப்பட்டனர். முதலில் “ பெரின்கியே ” என்ற முக்கிய கொள்ளைகாரனை பிடித்து அவனை அரசு சாட்சியாக மாற்றி அவனிடம் இருந்து பல தகவல்களை பெற்று நூற்றுகணக்கான மனிதர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்தார். பின்னர் பிரித்தானிய அரசு தக்கி மற்றும் வழிப்பறி ஒழிப்பு என்ற துறையை உருவாக்கி அதன் முதல் தலைவராக ஸ்லீமன் நியமிக்கப்பட்டார். தக்கிகளை ஒடுக்க பிரித்தானிய அரசு தக்கிகள் மற்றும் கொள்ளைகாரகளை ஒடுக்கும் சட்டத்தை (1836 – 48) இயற்றியது. ஸ்லீமன் முதலில் பெரின்கியே கொடுத்த தகவல்களின் படி பிரபல கொள்ளையர்களின் முக்கிய தகவல்களை கொண்ட ஆவணக் கோப்புகளை தயாரித்தார். தொடர்ந்து ஆயிரகணக்கான தக்கி அமைப்பை சேர்ந்த கொள்ளைகாரகள் கைது செய்யப்பட்டு பலருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு, பலர் ஆளில்லா தீவுகளுக்கு நாடு கடத்தப் பட்டனர்.[10][11] பின்னர் இந்த அமைப்பும் சட்டமும் பழங்குடியினர் குற்ற சட்டம் (Criminal Tribes Act (CTA) 1871) என்று மாற்றபட்டது. 1904 வரை இருந்த தகி மற்றும் கொள்ளைக்காரர் துறைதான் பின்னர் குற்ற புலனாய்வு துறையாக Central Criminal Intelligence Department (CID) மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Tracing India's cult of Thugs". 3 August 2003. Los Angeles Times.
  2. http://www.britannica.com/EBchecked/topic/594263/thug
  3. http://www.mahavidya.ca/hindu-sects/the-thuggee-cult/}}
  4. R.V. Russell; R.B.H. Lai (1995). The tribes and castes of the central provinces of India. Asian Educational Services. p. 559. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0833-7. பார்க்கப்பட்ட நாள் 19 April 2011.
  5. Thugs 1902 Encyclopædia Britannica'.பாளி-sthag
  6. "The Thugs Worshipping Kalee". The Missionary Repository for Youth, and Sunday School Missionary Magazine (Paternoster Row, London: John Snow) XII: 98. 1848. https://books.google.com.au/books?id=0FkEAAAAQAAJ&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 6 November 2015. 
  7. Richardson, Louise (2006). What Terrorists Want (2007 ed.). Random House \. p. 27. பார்க்கப்பட்ட நாள் 28 November 2014.
  8. "Colonial India and the Making of Empire Cinema: Image, Ideology and Identity", by Prem Chowdhry, p. 137
  9. Dash, Mike Thug: the true story of India's murderous cult பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86207-604-9, 2005
  10. "Thugs Traditional View" (shtml). BBC. Archived from the original on 2007-10-17. பார்க்கப்பட்ட நாள் 2007-09-17.
  11. Sinister sects: Thug, Mike Dash's investigation into the gangs who preyed on travellers in 19th-century India by Kevin Rushby, தி கார்டியன், Saturday, 11 June 2005.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்கிகள்&oldid=3583170" இலிருந்து மீள்விக்கப்பட்டது