டெஸ்டின் டேனியல் கிரெட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெஸ்டின் டேனியல் கிரெட்டன்
Destin Daniel Cretton by Gage Skidmore.jpg
பிறப்புநவம்பர் 23, 1978 (1978-11-23) (அகவை 42)
ஹைக்கூ, ஹவாய், ஐக்கிய அமெரிக்கா[1]
பணி
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை
பிள்ளைகள்2

டெஸ்டின் டேனியல் கிரெட்டன் (ஆங்கில மொழி: Destin Daniel Cretton)[2] (பிறப்பு: நவம்பர் 23, 1978) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர், படத்தொகுப்பாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் சோர்ட் டேர்ம் 12[3] (2013), தி கிளாஸ் கேஸ்லே[4] (2017) மற்றும் ஜஸ்ட் மெர்சி (2019 போன்ற திரைப்படங்களில் பணிபுரிந்ததன் மூலம் அறியப்படும் இயக்குநர் ஆனார். 2021 ஆம் ஆண்டு மார்வெல் திரைப்படமான சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ்[5] என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.[6]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கிரெட்டன் நவம்பர் 23, 1978 ஆம் ஆண்டில் ஹைக்கூ, ஹவாய் தீவில் ஜப்பானிய அமெரிக்க சிகையலங்கார நிபுணர் ஜானிஸ் ஹாரூ கிரெட்டனுக்கும் தீயணைப்புத் துறையில் பணியாற்றிய ஐரிஷ் மற்றும் ஸ்லோவாக் வம்சாவளியைச் சேர்ந்த டேனியல் கிரெட்டனு மகனாக பிறந்தார்.[7][8] இவருக்கு ஐந்து உடன்பிறப்புகள் உண்டு.[9]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]