துட்சி இனக்குழு
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(2.5 மில்லியன் (ருவாண்டா, புருண்டி)) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
ருவாண்டா, புருண்டி, கிழக்கு கொங்கோ சனநாயக குடியரசு | |
மொழி(கள்) | |
கிருண்டி, கின்யாருவாண்டா | |
சமயங்கள் | |
கத்தோலிக்க திருச்சபை | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
ஹூட்டு, துவா |
டூட்சி (Tutsi) எனப்படுவோர் மத்திய ஆபிரிக்காவில் ருவாண்டா மற்றும் புருண்டி ஆகிய நாடுகளில் வாழும் மூன்று தேசிய இனக்குழுக்களில் ஒன்றாகும். மற்றவை ஹூட்டு (Hutu) மற்றும் துவா (Twa) என்பவையாகும்.
ருவாண்டாவின் 77% துட்சி இனத்தவர்கள் 1994 இல் நிகழ்ந்த இனப்படுகொலைகளில் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.[1].
தோற்றம்
[தொகு]ருவாண்டாவின் இனக்குழுக்கள் தொடர்பான கருத்துக்கள் நீண்டதும், சிக்கலானதுமான வரலாற்றைக் கொண்டவை. ஹூட்டு, துட்சி என்பவற்றின் வரைவிலக்கணங்கள், இடத்துக்கு இடமும், காலத்துக்குக் காலமும் மாறுபட்டு வந்துள்ளன. ருவாண்டா முழுவதிலும் சமூக அமைப்பு ஒரே மாதிரியாக இல்லை. துட்சிப் பொது மக்களிலிருந்தும் வேறுபடுத்தபட்ட துட்சி அதிகார வர்க்கத்தினர் இருந்தனர். வசதி படைத்த ஹூட்டுக்களும், மேல் தட்டு துட்சிகளும், ஒருவரிலிருந்து ஒருவரைப் பிரித்து அறியமுடியாதபடி இருந்தனர். பெல்ஜியக் குடியேற்றவாதிகள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தியபோது, 10 பசுக்களுக்கு மேல் வைத்திருந்தவர்களையும், நீளமான மூக்கு உடையவர்களையும் துட்சிகள் என வரையறுத்தனர். சப்பை மூக்கைக் கொண்டவர்களும், பத்துக்கும் குறைவான பசுக்களைக் கொண்டிருந்தவர்களும் ஹூட்டுக்கள் எனப்பட்டனர். ஆபிரிக்கரிடையே நீளமான மூக்குடையவர்களைக் கண்ட ஜெர்மானியக் குடியேற்றவாதிகள், அவர்களை எதியோப்பியா வழியாக வந்த ஐரோப்பிய மரபு வழியைச் சேர்ந்தவர்களாகக் காட்ட முயன்றனர். எனினும், தற்காலத்தில், y-மரபணுக்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகள், துட்சிகள் 100% ஆபிரிக்கத் தொல்குடிகளே எனக் காட்டுகின்றன. இவ்வாய்வுகள், மரபியல் அடிப்படையில் துட்சிகளும், ஹூட்டுக்களும் ஒரே மாதிரியானவர்களே என்பதையும் காட்டுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- ருவாண்டா வரலாறு பரணிடப்பட்டது 2008-05-03 at the வந்தவழி இயந்திரம்
- டூட்சி புத்திஜீவி ஒருவரின் குறிப்பு பரணிடப்பட்டது 2008-06-12 at the வந்தவழி இயந்திரம்
- டூட்சி