உள்ளடக்கத்துக்குச் செல்

துவா இனக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவா
மரபுவழி அம்பு, வில் ஆகியவற்றுடன் பாத்வா.
மொத்த மக்கள்தொகை
(80,000)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ருவாண்டா, புரூண்டி, கொங்கோ, தான்சானியா, உகண்டா
மொழி(கள்)
கின்யர்வாண்டா, கிருண்டி, ருகிகா
சமயங்கள்
7% கிறிஸ்தவம்[1]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
ஹூட்டு, துட்சி

துவா இனக்குழு (Twa) அல்லது பாத்வா இனக்குழு மத்திய ஆபிரிக்காவில் ருவாண்டா, புருண்டி, உகண்டா ஆகிய நாடுகளிலும், கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியிலும் வாழும் இனக்குழுக்களில் ஒன்றாகும். பிக்மி மக்களான இவர்களே மத்திய ஆபிரிக்காவின் பேரேரிப் பகுதியில் மிகப் பழைய காலம் தொட்டு வாழ்ந்து வருபவர்களாவர். 2000 ஆண்டில் இவர்களின் மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 80,000 ஆக இருந்தது.

அங்கோலா, நமீபியா, சாம்பியா, பொட்ஸ்வானா ஆகிய நாடுகளிலும் தெற்கத்திய துவா மக்கள் வாந்துவருகின்றனர். இவர்கள் காட்டுப் பகுதிகளிலிருந்து தொலைவில் பாலைவனப் பகுதிகளிலும், சதுப்பு நிலப் பகுதிகளிலும் வாழ்கிறார்கள். இவர்கள் பற்றிக் குறைவான ஆய்வுகளே நடத்தப்பட்டுள்ளன.


வரலாறு

[தொகு]

சுமார் 11 ஆம் நூற்றாண்டளவில் துவா இனக்குழுவினரின் மரபுவழிப் பகுதிகளுக்குள் வந்த ஹூட்டு இனக்குழுவினர் அவர்களைத் தமது ஆதிக்கத்துள் கொண்டுவந்தனர். 15 ஆம் நூற்றாண்டை அண்டி துட்சி இனக்குழுவினர் இப் பகுதிக்குள் புகுந்து முன்னிருந்த இரு இனத்தவரையும் அடிப்படுத்தினர். துவாக்கள், ஹூட்டுக்களும், துத்சிக்களும் பேசும் கின்யார்வாண்டா மொழியையே பேசுகின்றனர். பல நூறு ஆண்டுகளாகவே துவாக்கள், மிகச் சிறிய மக்கள் குழுவினராகவே இப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது, ருவாண்டாவிலும், புரூண்டியிலும், மொத்த மக்கள் தொகையில் சுமார் 1% என்ற அளவிலேயே இவர்கள் உள்ளார்கள். இதனால், இந்நாடுகளின் அரசியலில் இவர்களது பங்களிப்பு மிகக் குறைவே.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Johnstone, Patrick, and Jason Mandryk. Operation World. Waynesboro, GA: Paternoster Lifestyle, 2001.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவா_இனக்குழு&oldid=3815063" இலிருந்து மீள்விக்கப்பட்டது