டுவிங்கிள் கன்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டுவிங்கிள் கன்னா
Twinkle khanna.jpg
இயற் பெயர் டீனா ஜதின் கன்னா
பிறப்பு திசம்பர் 29, 1974 (1974-12-29) (அகவை 41)
புனே, மகாராட்டிரா, இந்தியா
தொழில் நடிகை, உட்புற வடிவமைப்பாளர்
நடிப்புக் காலம் 1995 - 2001 (ஒரு நடிகையாக ஓய்வுபெற்றார்)
துணைவர் அக்க்ஷய் குமார் (2001-இன்றுவரை)
பிள்ளைகள் ஆரவ் பாடியா

டுவிங்கிள்கன்னா 1974வது வருடம் டிசம்பர் 29ம் தேதி பிறந்த டினா ஜதின் கன்னா பாலிவுட் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. இவர் அக்ஷய்குமார் என்னும் பாலிவுட் நடிகரின் மனைவியாவார். தற்போது இவர் உள் அலங்கார நிபுணராகவும் தி ஒயிட் விண்டோ என்னும் கடையின் இணை-உரிமையாளராகவும் உள்ளார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

பாபி தியோல் ஜோடியாக பர்சாத் (1995) என்னும் திரைப்படத்தில் அவர் அரங்கேறினார். இந்தப் படம் வசூலில் வெற்றி பெற்றது; மேலும் அவர் தனது நடிப்பிற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார். சற்றே மாறுகண் கொண்டிருந்த நிலைக்காக ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்ட கன்னா, பல படங்களில் நடித்து அவற்றிற்காக சிறந்த விமர்சனங்களும், பார்வையாளர்களின் அங்கீகாரமும் பெற்றுள்ளார். சாருக் கான், சல்மான் கான், அமீர் கான், சஞ்சய் தத், செயிஃப் அலி கான் மற்றும் கோவிந்தா உள்ளிட்ட, இந்தத் தொழிலில் இருக்கும் மிகச் சிறந்த நட்சத்திரங்கள் சிலருடன் இவர் நடித்துள்ளார். குச் குச் ஹோத்தா ஹை என்னும் திரைப்படத்தில் டினா என்னும் கதாபாத்திரத்திற்காக தன் மனதில் டுவிங்கிள்தான் இருந்தார் என்றும் அவர் மறுத்து விட்டதால் ரானி ஒப்பந்தமிடப்பட்டதாகவும் கரன் ஜோஹர் ஒரு பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார்.

இவருடைய குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சல்மான் கானுடன் அடுத்த வீட்டுப் பெண் போலத் தோற்றமளிக்கும் கதாபாத்திரத்தில் நடித்த 'ஜப் ப்யார் கிசி ஸே ஹோத்தா ஹை (1998), ஷாருக்கானுடன் ரகசிய உளவாளியாக நடித்த பாத்ஷா (1999) மற்றும் கிராமத்துப் பெண் வேடத்தில் நடித்த மேலா (2000) ஆகியவை அடங்கும். 1999வது வருடம் சீனு என்னும் தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் இவர் வெங்கடேஷ் ஜோடியாக நடித்தார்.

அக்ஷய் குமாரை மணந்த பிறகு, நடிப்புத் தொழிலை இனியும் தான் விரும்பவில்லை என்று கூறி இவர் திரைப்படத் தொழிலை விட்டு விட்டார். அவர் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். அவரது கடைசிப் படம், சுமாரான வசூல் பெற்ற லவ் கே லியே குச் பீ கரேகா (2001).[1]

2002வது வருடம் கன்னா சொந்தமாக உள் அலங்காரப் பொருள் விற்பனை நிலையம் ஒன்றை மும்பை நகரில், கிராபோர்ட் மார்க்கெட் (Crawford) பகுதியில் தி ஒயிட் விண்டோ என்ற பெயரில், தமது நெடுங்காலத் தோழரான குரிலின் மன்சந்தாவுடன் பங்காளராகத் துவக்கினார். அதன் பிறகு, இந்த விற்பனை நிலையம் மிகவும் மதிப்பு மிக்க எல்லி டெகோர் சர்வதேச வடிவமைப்பு விருதினை (எல்லி டெகோர் பத்திரிகையின் இந்தியப் பதிப்பிடமிருந்து) பெற்றுள்ளது. இந்த முதன்மை விற்பனை நிலையத்தின் மற்றொரு கிளையை மும்பையின் வேறொரு பகுதியில் டுவிங்கிள் திறந்துள்ளார்; மேலும் இந்தியா முழுவதும் இதை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளார்.[2]. அண்மையில், டுவிங்கிள் கன்னா ராணி முகர்ஜியின் புதிய வீட்டிற்கான உள் அலங்காரத்தைச் செய்தார்.[3]

சொந்த வாழ்க்கை[தொகு]

டுவிங்கிள் கன்னா டிம்பிள் கபாடியா மற்றும் ராஜேஷ் கன்னா ஆகியோரின் மகள். இவர் ரிங்கி கன்னாவின் சகோதரி. இவரது சித்தி சிம்பிள் கபாடியா. டுவிங்கிள் கன்னா ஒரு பஞ்சாபி மற்றும் குஜராத்திக் குடும்பத்தில் பிறந்தவர். டுவிங்கிள் அக்ஷய் குமார் என்னும் பாலிவுட் நடிகரை 2001வது ஆண்டு மணந்தார்; இவர்களுக்கு ஆரவ் பாடியா என்னும் ஒரு மகன் உள்ளான். இவர் தனது திருமணத்திற்குப் பிறகு திரைப்படத் துறையிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்; அதன் பிறகு உள் அலங்கார வடிவமைப்புகளில் ஈடுபட்டுள்ளார்.

திரைப்பட விவரங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் இதர குறிப்புகள்
1995 பர்சாத் டினா ஓபராய் ஃபிலிம்ஃபேர் சிறந்த அறிமுக நடிகை விருது வென்றார்.
1996 ஜான் காஜல்
1996 தில் தேரா தீவானா கோமல்
1997 உஃப்! ஏ மொஹாப்பத் சோனியா வர்மா
1997 இதிஹாஸ் நாயினா
1997 ஜுல்மி
1998 ஜப் ப்யார் கிசி ஸே ஹோத்தா ஹை கோமா சின்ஹா
1999 ஏ ஹை மும்பய் மேரி ஜான் ஜாஸ்மின் அரோடா
1999 பாத்ஷா சீமா மல்ஹோத்ரா/ டினா
1999 சீனு டுவிங்கிள் கன்னாவின் ஒரே தெலுங்குப் படம்
2000. மேலா ரூபா
2000. சல் மேரே பாய் பூஜா சிறப்புத் தோற்றம்
2000. ஜோரு கா குலாம் துர்கா
2001 ஜோடி நம்பர் 1 டினா
2001 லவ் கே லியே குச் பீ கரேகா அஞ்சலி மூர்த்தி

மேற்கோள்கள்[தொகு]

  1. "boxofficeindia.com". LKLKBK box office status. மூல முகவரியிலிருந்து 15 October 2006 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 April 2007.
  2. ஹெச்டிடிபி://டபிள்யூடபிள்யூடபிள்யூ.ட்ரிப்யூன்இன்டியா.காம்/2002/20020511/விண்டோஸ்/மெயின்4/ஹெச்டிஎம்
  3. "bollyvista.com". Twinkle Designs Rani Mukerji's Big Mansion. பார்த்த நாள் 14 April 2007.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டுவிங்கிள்_கன்னா&oldid=1603637" இருந்து மீள்விக்கப்பட்டது