டுரூரி ஆர்கிட்
டுரூரி ஆர்கிட் Paphiopedilum druryi | |
---|---|
![]() | |
டுரூரி ஆர்கிட் மலர் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலை |
வரிசை: | Asparagales |
குடும்பம்: | ஆர்க்கிட் |
துணைக்குடும்பம்: | Cypripedioideae |
பேரினம்: | Paphiopedilum |
இனம்: | P. druryi |
இருசொற் பெயரீடு | |
Paphiopedilum druryi (Bedd.) Stein | |
வேறு பெயர்கள் | |
டுரூரி ஆர்கிட் (Paphiopedilum druryi) என்பது ஒரு காலணி ஆர்கிட் ஆகும். இது தென்னிந்தியாவின், திருவாங்கூர் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் உள்ள ஒரே காலணி ஆர்கிட் வகை இதுவாகும்.
19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியான கர்னல். ஹீபர் டுரூரி தென்னிந்தியக் காடுகளில் உள்ள தாவரங்களைப் பதிவு செய்ய பயணித்தபோது, அகத்தியமலையில் இருக்கும் இந்த காலணி ஆர்கிடைக் கண்டறிந்தார். இவர் 1873இல் எழுதிய ‘தி ஹேண்ட்புக் ஆஃப் இந்தியன் ஃபுளோரா’ (The Handbook of Indian Flora) என்ற நூலில் இந்தச் செடியைப்பற்றி விவரித்தார். அவரது பெயரே இந்தச் செடிக்குச் சூட்டப்பட்டது.
விளக்கம்[தொகு]
இந்தத் தாவரமானது மண்ணுக்கு அடியிலேயே இருக்குமென்றும் பூ மலரும்போது மட்டும் (அக்டோபர் - நவம்பர் மாதங்களில்) ஒரு சிறிய தென்னங்கன்று உருவில் தரைக்கு மேல தோன்றும் என்றும் கூறப்படுகிறது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ சு. தியடோர் பாஸ்கரன் (2018 அக்டோபர் 13). "மாய மலரைத் தேடி..." கட்டுரை. இந்து தமிழ். 14 அக்டோபர் 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|date=
(உதவி)