டி. வி. குண்டப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. வி. குண்டப்பா

டி. வி. குண்டப்பா (D. V. Gundappa), அல்லது டி.வி.ஜி என பிரபலமாக அழைக்கப்படும் தேவநஹள்ளி வெங்கடரமணைய குண்டப்பா, (17 மார்ச் 1887 - 7 அக்டோபர் 1975) பிரபல கன்னட மொழி எழுத்தாளர் மற்றும் தத்துவஞானி ஆவார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படைப்பு மங்குதிம்மன காகா ("டல் திம்மாவின் ரிக்மரோல்", 1943), இது மறைந்த இடைக்கால கவிஞர் சர்வஜ்னாவின் ஞானக் கவிதைகளுக்கு ஒத்ததாகும். [1]

வெளியீடுகள் [2][தொகு]

கவிதைகள்[தொகு]

  • வசந்த குசுமாஞ்சலி (1922)
  • நிவேதனா (1942)
  • கவிதை
  • உமரன ஒசே
  • மங்குதிம்மன காகா
  • மாருல முனியான காகா[3]
  • ஸ்ரீ ராம பரீக்‌ஷாநாம்
  • அந்தப்புர கீதே
  • கீதா சகுந்தலா
  • கேதகி வனம் (1973)
  • "கௌரவிசு ஜீவனவா"

கட்டுரைகள்[தொகு]

  • ஜீவன சௌந்தர்ய மது சாகித்யா
  • சாகித்ய சக்தி
  • பாலிகொண்டு நம்பிகே

நாடகங்கள்[தொகு]

  • வித்யாரண்ய விஜயம்
  • ஜாக் கேத்
  • மெகபத்
  • கனகாலுகா
  • திலோத்தமை

சுயசரிதை[தொகு]

  • திவான் ரங்காசார்லு
  • கோபாலகிருஷ்ண கோகலே
  • வித்யாரண்யர சமகலீனரு
  • ஜனபக சித்ரா ஷாலே 1 முதல் ஜனபக சித்ரா ஷாலே 6 வரை
  • ஹலவு மஹனேயரு
  • மைசூரின திவானரு
  • கலோபாசாகரு

ஆன்மீகம்[2][தொகு]

  • புருஷசுக்தம்
  • தேவரு
  • ருத,சத்ய மட்டு தர்மா
  • ஈஷோபநிஷதம்

குழந்தைகள் இலக்கியம்[தொகு]

  • இந்திரவஜ்ரா
  • பெக்கோஜி

மரபுரிமை[தொகு]

1943 இல் வெளியிடப்பட்ட, மங்குதிம்மன காகா கன்னடத்தின் முக்கிய இலக்கியப் படைப்புகளில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த படைப்பின் தலைப்பை "டல் திம்மாவின் ரிக்மரோல்" என்று மொழிபெயர்க்கலாம். [4] [5] வாழ்க்கையின் சவால்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வது, எல்லாவற்றையும் ஒரு தெய்வீக நாடகமாக புரிந்துகொள்வது, நம்முடைய சொந்த மற்றும் பிறர் தேவைகளை அங்கீகரிப்பது, மனித ஆசைகளையும், கனவுகளையும் மதித்தல், உன்னதமான காரணங்களுக்காக உழைத்தல் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக முதிர்ச்சியடைந்த சிந்தனையில் நமது அகங்காரத்தை கரைப்பது ஆகியவை மங்குதிம்மன காகா என்கிற இவரது படைப்பில் அடங்கும். எண்ணற்ற உருவகங்கள், விளக்கங்கள் மற்றும் பல தேர்வு வெளிப்பாடுகள் இந் நூலின் வாசிப்பை முழுமையாக மகிழ்விக்கின்றன. இரண்டு முறை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த படைப்பு இந்தி மற்றும் சமசுகிருதத்திலும் அதன் மொழிபெயர்ப்புகளைக் கொண்டுள்ளது. வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் ஒளியை எறிந்து, இந்த எழுச்சியூட்டும் இலக்கியம் அனைவருக்கும் ஒரு சாதகமான செய்தியை அனுப்புகிறது: வாழ, கற்றுக்கொள்ள, வளர மற்றும் உங்கள் சுற்றுப்புறங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருங்கள். [6] கன்னட எழுத்தாளர்களிடையே டி.வி.ஜி டைட்டன் என்று ரங்கநாத சர்மா கூறுகிறார். டி.வி.ஜி மெட்ரிகுலேஷன் படிப்பை மட்டுமே முடித்திருந்தாலும், கர்நாடகாவில் ஒரு முக்கிய இலக்கியப் பெயராக மாற அவர் மிகப்பெரிய அறிவைப் பெற்றார். சமுதாயத்தின் மீதான டி.வி.ஜியின் அக்கறை ஒப்பிடமுடியாதது, மேலும் அவர் 'கன்னடநாடு'க்கு சேவை செய்த சிறந்த நபர்களில் ஒருவர் என்று அவர் குறிப்பிடுகிறார். [7]

மாருலா முனியானா காகா என்று அழைக்கப்படும் மங்குதிம்மன காகாவுக்கு டி.வி. குண்டப்பா, அதன் தொடர்ச்சியை எழுதினார். மருலா முனியானா காகா என்பது நடைமுறையில் மங்குதிம்மன காகாவின் நீட்டிப்பாகும். இது, டி.வி.ஜி யின் தனிப்பட்ட பாணியைக் கொண்ட கவிதைகளாக உள்ளன. இவை, அவரின் மரணத்திற்குப் பிறகு ஒன்றாக சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தில் 825 கவிதைகள் உள்ளன. மங்குதிம்மன காகாவில் உள்ள கவிதைகளின் எண்ணிக்கையை விட 120 கவிதைகள் குறைவாக உள்ளன.

இவர், 1967 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருதைப் பெற்ற ஜீவன தர்ம யோகா என்றும் அழைக்கப்படும் ஸ்ரீமத் பகவத் கீதா தத்பார்யாவை [8] எழுதினார். ஜீவநதர்மயோகா (அன்றாட வாழ்க்கையின் யோகா) என்பது ஒரு அசாதாரண இலக்கியமாகும். இது மிகுந்த ஆறுதலையும், அதே நேரத்தில் ஒரு பொதுவானவர் வாழ்க்கையின் மதிப்புகளை உணர வைக்கும் விதமாக அமைந்துள்ளது. டி.வி.ஜியின் இந்த படைப்பு, சிறந்த இந்து தத்துவத்தின் மகிமையை, ஒரு சாதாரண மனிதன் புரிந்து கொள்ளும் முறையில் எழுதியுள்ளார். மேலும், இது, ஒவ்வொரு மனிதனும் விரும்பும் பயனுள்ள வாழ்க்கையின் கையேடாக மாறியுள்ளது. [9]

விருதுகள் மற்றும் கௌரவங்கள்[தொகு]

பெங்களூரு, பசவனகுடி, பக்லே ராக் பூங்காவில் டி.வி.குண்டப்பாவின் சிலை.

1974 ஆம் ஆண்டில் குண்டப்பாவுக்கு இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கியது. முதலமைச்சர் ஸ்ரீ வீரந்திர பாட்டீலின் கீழ் கர்நாடக மாநிலம் 1970 ஆம் ஆண்டில் பெங்களூரு ரவீந்திர கல்சேத்ராவில் கன்னட இலக்கியத்திற்கான சேவைகளுக்கு கௌரவித்ததுடன் ரூ .90,000 பண முடிப்பை வழங்கியது. டி.வி.ஜி முழு விருது பணத்தையும் கோகலே பொது விவகார நிறுவனத்திற்கு வழங்கினார். இந்திய அஞ்சல் துறை டாக்டர் குண்டப்பாவின் நினைவு முத்திரையை 1988 இல் வெளியிட்டது. [10]

2003 ஆம் ஆண்டில், பசவனகுடியின் பக்லே ராக் பூங்காவில் டி.வி.ஜி.க்கு மரியாதை செலுத்துவதற்காக ஒரு சிலை அமைக்கப்பட்டது.

இ-வெளியீடுகள்[தொகு]

கோகலே பொது விவகார நிறுவனம் டி.வி.குண்டப்பாவின் அனைத்து வெளியீடுகளையும் மின்புத்தக வடிவில் கொண்டு வந்துள்ளது. .

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. George, pp. 1057, 1437
  2. 2.0 2.1 D. V. Gundappa (1970) [1953]. Ishopanishat. Kavyalaya Publishers, Mysuru. பக். 53. 
  3. D.V. Gundappa. Marula muniyana kagga. http://www.goodreads.com/book/show/17936242-marula-muniyana-kagga. 
  4. George, p. 175
  5. "DVG on Gnana Peeta Award". blogspot.in இம் மூலத்தில் இருந்து 2014-03-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140310135508/http://msdivy.blogspot.in/2011/09/dvg-on-gnana-peeta-award.html/. 
  6. "The Wisdom of Kagga – A Modern Classic". https://docs.google.com/viewer?url=http%3A%2F%2Fwww.yogabharati.org%2Ffliers%2F2003%2Fchidananda-kagga.pdf&docid=3c080a5f132c4dc36e53f7cedc424ca2&a=bi&pagenumber=1&w=847. 
  7. "DVG was a titan among Kannada writers, saysRanganatha Sharma". http://www.thehindu.com/news/national/karnataka/dvg-was-a-titan-among-kannada-writers-saysranganatha-sharma/article4544698.ece. 
  8. "The Gita for Every Man". Yabaluri.org. Archived from the original on 1 January 2014. பார்க்கப்பட்ட நாள் 12 February 2013.
  9. "Complete works of D.V.Gundappa". Kamat. 22 November 2006. http://www.kamat.com/jyotsna/blog/blog.php?BlogID=1006. 
  10. "Commemorative stamp of Gundappa". Indianpost.com. 17 March 1988. பார்க்கப்பட்ட நாள் 12 February 2013.

மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்கள்[தொகு]

  • கே.எம். ஜார்ஜ் (1992). நவீன இந்திய இலக்கியம், ஒரு தொகுப்பு: நாடகங்கள் மற்றும் உரைநடை. சாகித்ய அகாடமி. ISBN 978-81-7201-324-0.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
D. V. Gundappa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._வி._குண்டப்பா&oldid=3770457" இலிருந்து மீள்விக்கப்பட்டது