டி. மீனா குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. மீனா குமாரி
தலைமை நீதிபதி-மேகாலய உயர் நீதிமன்றம்
பதவியில்
23 மார்ச்சு 2013 – 3 ஆகத்து 2013
பரிந்துரைப்புஇந்திய உச்ச நீதிமன்றம்
நியமிப்புகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
முன்னையவர்புதிய அலுவலகம்
பின்னவர்புரபல்ல சந்திர பந்த்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 ஆகத்து 1951 (1951-08-03) (அகவை 72)
யாலமான்சில், விசாகப்பட்டினம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்

டி. மீனா குமாரி (பிறப்பு 1951) இந்தியாவின் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆவார்.[1] இவர் மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி ஆவார்.[2] இவர் இதற்கு முன்பு ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றம் மற்றும் பாட்னா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றினார்.[3]

2013ஆம் ஆண்டு மேகாலயாவின் முதல் தலைமை நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டபோது, மாநிலத்தில் விரைவு நீதிமன்றங்களை அமைப்பதும், பிராந்தியத்தின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளைக் கையாள்வதும் தனது முதல் முன்னுரிமை என்று கூறினார். இருப்பினும், இவர் ஐந்து மாதங்கள் மட்டுமே இப்பதவியில் இருந்தார். ஆகத்து 2013-இல் மேகாலயா தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, திசம்பர் 2014-இல் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2011ஆம் ஆண்டு முதல் இந்தப் பதவி காலியாக இருந்தது.

ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய போது, ஏழு நீதிபதிகள் கொண்ட இருக்கையின் உறுப்பினராக டி. முரளிதர் ராவ் ஆந்திரப் பிரதேச மாநில 2010 வழக்கில் ஈடுபட்டார். இந்த வழக்கு மத அடிப்படையிலான இடஒதுக்கீடு, குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முசுலிம்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பானது. ஒதுக்கீட்டை ரத்து செய்த பெரும்பான்மை கருத்துடன் உடன்படும் போது, நீதிபதி டி. மீனா குமாரி ஒரு தனி தீர்ப்பை வழங்கினார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாத்தில் உள்ள உசுமானியா பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டப்படிப்பை முடித்தார். இவர் மறைந்த வயலின் கலைஞர் பத்மசிறீ வெங்கடசுவாமி நாயுடுவின் பேத்தி ஆவார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chief Justice retires". Telegraphindia.com இம் மூலத்தில் இருந்து 21 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140121134055/http://www.telegraphindia.com/1130804/jsp/northeast/story_17193101.jsp%23.Ut5v6_u6bDd. 
  2. "Meena Kumari sworn in as first chief justice of Meghalaya HC". http://www.thehindu.com/news/national/other-states/meena-kumari-sworn-in-as-first-chief-justice-of-meghalaya-hc/article4541504.ece. 
  3. "Hon'ble Justice Smt. T. Meena Kumari :: Patna High Court". Patnahighcourt.bih.nic.in. Archived from the original on 2014-01-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-21.
  4. . 21 March 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._மீனா_குமாரி&oldid=3895127" இலிருந்து மீள்விக்கப்பட்டது