டிரேக் கடல் பெருவழி
டிரேக் கடல் பெருவழி (Drake Passage எசுப்பானியம்: Pasaje de Drake ) அல்லது மார் டி ஹோசஸ் -ஹோசசின் கடல் என்பது தென் அமெரிக்காவின் ஹார்ன் முனை, சிலி மற்றும் அந்தாட்டிக்காவின் தென் ஷெட்லான்ட் தீவுகளுக்கு இடையில் உள்ள பெருங்கடல் பெருவழி ஆகும். இது அட்லாண்டிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியை ( ஸ்கோடியா கடல் ) பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கு பகுதியுடன் இணைத்து தென்முனைப் பெருங்கடலில் நீண்டுள்ளது.
வரலாறு
[தொகு]இந்த பெருங்கடல் பெருவழியின் ஆங்கில மொழி பெயரானது 16 ஆம் நூற்றாண்டின் ஆங்கில கப்பல் தலைவர் சர் பிரான்சிஸ் டிரேக்கின் பெயரிலிருந்து உருவானது. டிரேக்கின் மீதமுள்ள ஒரே கப்பலில், மகெல்லன் நீரிணையின் வழியாகச் சென்றபின், செப்டம்பர் 1578 இல் தெற்கே தகர்ந்தது. இந்த நிகழ்வானது அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிப்படையாக குறித்தது.
அரை நூற்றாண்டுக்கு முன்னர், மாகெல்லன் நீரிணையின் நுழைவாயிலிலிருந்து ஒரு பலத்த காற்றால் ஸ்பெயினின் கடற்படை பிரான்சிஸ்கோ டி ஹோசஸின் குழுவினர் தெற்கே தள்ளப்பட்டனர். அதன் பின்னர், ஒரு நிலத்தின் முடிவை அவர்கள் கண்டதாக நினைத்தார்கள், மேலும் 1525 ஆம் ஆண்டில் இந்த பெருங்கடல் பெருவழியை ஊகித்திருக்கலாம். [1] இந்த காரணத்திற்காக, சில ஸ்பானிஷ் மற்றும் லத்தீன் அமெரிக்க வரலாற்றாசிரியர்களும் ஆதாரங்களும் பிரான்சிஸ்கோ டி ஹோஸஸுக்குப் பதிலாக மார் டி ஹோசஸ் என்று அழைக்கின்றனர்.
இந்த பெருங்கடல் பெருவழியில் பதிவு செய்யப்பட்ட முதல் பயணமானது 1616 ஆம் ஆண்டில் டச்சு மாலுமி வில்லெம் ஷவுட்டன் தலைமையில் ஈன்ட்ராச்ச்ட், என்ற கப்பலில் நடந்தது அப்போது ஹார்ன் முனை என்று பெயரிட்டனர்.
நிலவியல்
[தொகு]கேப் ஹார்னுக்கும் லிவிங்ஸ்டன் தீவுக்கும் இடையில் 800 கிலோமீட்டர் (500 மைல்) அகலமுள்ள பாதையாக இது உள்ளது. இது அண்டார்டிகாவிலிருந்து வேறு எந்த நிலப்பரப்பிற்கும் மிகக் குறுகிய குறுக்கு வழியாகும். அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையிலான எல்லை சில நேரங்களில் ஹார்ன் முனையில் இருந்து ஸ்னோ தீவுக்கு ( 130 கிலோமீட்டர்கள் (81 mi) வரையப்பட்ட ஒரு கோட்டாக எடுத்துக் கொள்ளப்படுகிறது (அண்டார்டிகாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 130 கிலோமீட்டர் (81 மைல்) வடக்கே). மாற்றாக, கேப் ஹார்ன் வழியாக செல்லும் மெரிடியனையும் எல்லையாக எடுத்துக் கொள்ளலாம். இரண்டு எல்லைகளும் முற்றிலும் டிரேக் பெருங்கடல் பெருவழியில் உள்ளன.
தென் அமெரிக்காவின் தொலை தெற்குப் பகுதியைச் சுற்றியுள்ள மற்ற இரண்டு பெருங்கடல் பெருவழிகளும் ( ஹார்ன் முனையைச் சுற்றிச் செல்லவில்லை என்றாலும்), மகெல்லன் நீரிணை மற்றும் பீகிள் சேனல் ஆகியவை மிகவும் குறுகலானவை, இவை ஒரு கப்பலுக்கான சிறிய இடத்தையே கொண்டுள்ளன. அவை பனிக்கட்டியாகவும் மாறக்கூடியவை, சில சமயங்களில் காற்று மிகவும் வலுவாக வீசும், அப்போது எந்தவொரு படகோட்டியும் அதற்கு எதிராக முன்னேறி படகை செலுத்த முடியாது. ஆகவே, பெரும்பாலான பாய்மரக் கப்பல்கள் மிகவும் கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், நூற்றுக்கணக்கான மைல்களுக்கு திறந்த நீராக இருக்கும் டிரேக் பெருங்கடல் பெருவழியை விரும்புகின்றன. சிறிய டியாகோ ராமரெஸ் தீவுகள் ஹார்ன் முனைக்கு தென்மேற்கே 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் உள்ளன.
குறிப்புகள்
[தொகு]- ↑ Oyarzun, Javier, Expediciones españolas al Estrecho de Magallanes y Tierra de Fuego, 1976, Madrid: Ediciones Cultura Hispánica பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-7232-130-4
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Drake Passage தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.