டிரான்சுஆசியா ஏர்வேசு பறப்பு 235

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டிரான்சுஆசியா ஏர்வேசு பறப்பு 235
பறப்பு 235யின் இடது இறக்கை, வாடகையூர்தியையும் யுவான்டோங் பாலத்தையும் தகர்த்தவாறு கீலுங் ஆற்றில் வீழ்தல்
விபத்து சுருக்கம்
நாள்பெப்ரவரி 4, 2015 (2015-02-04)
சுருக்கம்எழும்பியவுடனேயே வீழ்ந்தது; புலனாய்வில்
இடம்கீலுங் ஆறு, தாய்பெய், சீனக் குடியரசு
25°03′48″N 121°37′04″E / 25.06333°N 121.61778°E / 25.06333; 121.61778ஆள்கூறுகள்: 25°03′48″N 121°37′04″E / 25.06333°N 121.61778°E / 25.06333; 121.61778
பயணிகள்53[1]
ஊழியர்5
காயமுற்றோர்17 (தரையில் காயமுற்ற இருவரையும் அடக்கி)[2]
உயிரிழப்புகள்31[3][4][5][6][7]
தப்பியவர்கள்15[3]
வானூர்தி வகைATR 72-600
இயக்கம்டிரான்சுஆசியா ஏர்வேசு
வானூர்தி பதிவுB-22816
பறப்பு புறப்பாடுதாய்பெய் சோங்சன் வானூர்தி நிலையம், சோங்சன், தாய்பெய், தாய்வான்
சேருமிடம்கின்மென் வானூர்தி நிலையம், கின்மென், சீனக் குடியரசு

டிரான்சுஆசியா ஏர்வேசு பறப்பு 235 (TransAsia Airways Flight 235, GE235/TNA235) பெப்ரவரி 4, 2015 அன்று உள்ளூர் நேரம் 10:55க்கு (ஒசநே+8) தாய்பெய் சோங்சன் வானூர்தி நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் வானூர்தி நிலையத்திற்கு மேற்கே 5.4 km (3.4 mi) தொலைவில் கீலுங் ஆற்றில் விழுந்து விபத்திற்குள்ளான தாய்வானிய உள்நாட்டு வான்பறப்பு ஆகும். டிரான்சுஆசியா ஏர்வேசு நிறுவனத்தின் இந்த பறப்பு, பத்து மாதங்களாக இயக்கத்திலிருந்த ஏடிஆர் 72-600 இரக வானூர்தி கொண்டு தாய்பெயிலிருந்து கின்மென் நகருக்கு 53 பயணிகளுடனும் ஐந்து சேவைப் பணியாளர்களுடனும் செல்வதாகவிருந்தது. இந்த விபத்தில் பதினைந்து பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.[8][9]

மேலெழும்பிய இரண்டு நிமிடங்களில் வானூர்தி ஓட்டுநர்கள் வானூர்தியின் இடதுபுற பொறியில் தீப்பிடித்ததாக அறிவித்தனர். பறப்பு 235 மிகக்கூடிய உயரமாக 1,050 அடி ஏறிய பின்னர் சரியத் தொடங்கியது. விரைந்து இடப்புறம் சாய்ந்த வானூர்தி தனது இடது இறக்கையால் வாடகையுந்தி ஒன்றையும் தரைப்பாலமொன்றையும் இடித்து வீழ்ந்தது.[6][10]

ஓராண்டுக்குள்ளேயே டிரான்சுஆசியா ஏடிஆர் இரக வானூர்தி ஒன்று இவ்வாறு விபத்திற்குள்ளாவது இரண்டாம் முறையாகும். முன்னதாக பறப்பு 222 விபத்திற்குள்ளாகி உள்ளது.[11]

விபத்திற்குப் பின்பான மீட்புப்பணி[தொகு]

கீலுங் ஆற்றிலுள்ள வானூர்தி மீட்கை.

தாய்பெய் தீயணைப்புத்துறை மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்; பகுதி மூழ்கியிருந்த வானூர்திக் கட்டகத்திலிருந்து மக்களை மீட்டு காற்றடைத்த படகுகள் மூலம் கரைக்குச் சேர்த்தனர். விபத்துநாளின் இரவு எட்டு மணிக்கு மீட்புக்குழுவினர் எடைதூக்கிகளை பயன்படுத்தி வானூர்திக் கட்டகத்தின் பெரும்பகுதியை வெளியே எடுத்தனர்.[12][13]

வானூர்தி[தொகு]

விபத்திற்குள்ளான வானூர்தி B-22816 - சனவரி 2015இல் எடுக்கப்பட்ட படம்.

விபத்தில் சிக்கிய வானூர்தி ஏடிஆர் 72-600 இரட்டை சுழல்விசை முந்துகை இரகம், பதிவெண் B-22816, MSN 1141 ஆகும். இது தனது முதல் பறப்பை மார்ச்சு 28, 2014 அன்று மேற்கொண்டது. டிரான்சுஆசியா ஏர்வேசுக்கு ஏப்ரல் 15, 2014இல் வழங்கப்பட்டது.[14]

பயணிகளும் பணியாளர்களும்[தொகு]

வானூர்தியில் 53 பயணிகளும் 5 பணியாளர்களும் பயணித்தனர். விபத்திலிருந்து 15 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

தேசியம் பயணிகள் பணியாளர் மொத்தம்
 சீனக் குடியரசு[a][15] 22 5 27
 சீனா 31 31
மொத்தம் 53 5 58
 1. தாய்வான்-ஆங்கொங் இரட்டை குடியுரிமை பெற்ற ஒருவரடக்கம்.

மேற்சான்றுகள்[தொகு]

 1. "复兴空难已救出20名伤者 3名无生命迹象" (Chinese). sina.com.cn. பார்த்த நாள் 4 February 2015.
 2. "Taiwanese plane with 53 passengers crashes in Taipei river". Yahoo! News (3 February 2015). மூல முகவரியிலிருந்து 4 பிப்ரவரி 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 4 February 2015.
 3. 3.0 3.1 "復興航空235航班事故說明(2月5日 16時 )" (5 February 2015). மூல முகவரியிலிருந்து 23 செப்டம்பர் 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 February 2015.
 4. "Taiwan TransAsia plane crashes into river". BBC News Online (4 February 2015). பார்த்த நாள் 4 February 2015.
 5. "【不斷更新】復興民航墜河 19死24失蹤". Apple Daily (Taiwan). Apple Daily (Taiwan) (4 February 2015). பார்த்த நாள் 4 February 2015.
 6. 6.0 6.1 "TransAsia crash: Twelve dead as plane crashes into Taiwan river". British Broadcasting Corporation. British Broadcasting Corporation (4 February 2015). பார்த்த நாள் 4 February 2015.
 7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Straits Times என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 8. Ramzy, Austin (4 February 2015). "At Least 19 Killed After Plane Crashes Into River in Taiwan". பார்த்த நாள் 4 February 2015.
 9. G235 Accident Description Flight Safety Foundation Aviation Safety Network
 10. "Crash: Transasia AT72 at Taipei on Feb 4th 2015, engine flame out, rolled sharply and lost height shortly after takeoff" (4 February 2015). பார்த்த நாள் 4 February 2015.
 11. Euan McKirdy and Vivian Kam, CNN (4 February 2015). "Dashcam captures moment TransAsia plane hits bridge, crashes in Taipei - CNN.com". CNN.
 12. "TransAsia plane crashes into river in Taiwan". The Telegraph (4 February 2015). பார்த்த நாள் 4 February 2015.
 13. "Video: Rescue crews in Taiwan work to free passengers trapped in TransAsia plane". The Telegraph (4 February 2015). மூல முகவரியிலிருந்து 8 பிப்ரவரி 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 4 February 2015.
 14. "ATR 42/72 - MSN 1141 - B-22816". பார்த்த நாள் 4 February 2015.
 15. Chung, Lawrence (4 February 2015). "Search for survivors after Taiwan plane crashes into river; 24 confirmed dead". South China Morning Post. http://www.scmp.com/news/china/article/1701465/airplane-carrying-over-50-people-crashes-river-taiwan. பார்த்த நாள்: 4 February 2015. 

வெளியிணைப்புகள்[தொகு]