டிரான்சுஆசியா ஏர்வேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரான்சுஆசியா ஏர்வேசு
復興航空
IATA ICAO அழைப்புக் குறியீடு
GE TNA டிரான்சுஆசியா
நிறுவல்1951
மையங்கள்தாய்பெய் சோங்சான் வானூர்தி நிலையம்
தாய்வான் டோயுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம்
வானூர்தி எண்ணிக்கை23 (+23 ஆணைகள்,3 விருப்பத் தேர்வுகள்)
சேரிடங்கள்33
தாய் நிறுவனம்கோல்டுசன் கட்டுமானம் & மேம்பாட்டு நிறுவனம்
தலைமையிடம்நெய்ஹு மாவட்டம், தாய்பெய், சீனக் குடியரசு
வலைத்தளம்http://www.tna.com.tw

டிரான்சுஆசியா ஏர்வேசு (TransAsia Airways, TNA; பண்டைய சீனம்: 復興航空; எளிய சீனம்: 复兴航空பின்யின்: Fùxīng Hángkōng) சீனக் குடியரசின் தாய்பெயின் நெய்கு மாவட்டத்தில் அமைந்துள்ள வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும். உள்ளூர் போக்குவரத்தைக் குவியப்படுத்தியே தனது இயக்கத்தை துவங்கினாலும் தற்போது இது 15 பன்னாட்டு வழித்தடங்களில், குறிப்பாக தென்கிழக்கு மற்றும் வடகிழக்காசியா நாடுகளுக்கு கால அட்டவணைப்படியான சேவைகளை வழங்கி வருகிறது.

இதன் தலைமையகம் தாய்பெயின் நெய்கு மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2] இதற்கு முன்னதாக தலைமையகம் தாய்பெயின் டடோங் மாவட்டத்தில் இருந்தது.[3][4][5]

விபத்துகளும் நிகழ்வுகளும்[தொகு]

  • திசம்பர் 21, 2002இல் டிரான்சுஆசியாவின் சரக்குப் பறப்பு 791, ஏடிஆர் 72-200 இரக வானூர்தி, தாய்பெயிலிருந்து மக்காவு பயணிக்கும்போது பனியின் காரணமாக வீழ்ந்தது. இரு பயணக்குழு பணியாளர்களும் உயிரிழந்தனர். வானூர்தி பனித்திறன் எல்லைக்கு மீறிய வானிலையில் மகுங் நகரத்தின் தென்மேற்கில் 17 கிமீ தொலைவில் கடலில் வீழ்ந்தது. தாய்வானின் வான்வழிப் பாதுகாப்பு அவையின் புலனாய்வின்படி வானூர்தியின் முக்கிய பாகங்களில் பனி சேர்ந்தமையால் கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது எனக் கண்டறியப்பட்டது. இந்தப் பனிச் சேகரிப்பைக் குறித்து ஓட்டுநர்கள் சரியான கவனம் கொள்ளவில்லை என்றும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டது.[6]
  • மார்ச் 21, 2003இல் டிரான்சுஆசியா பறப்பு 543, ஏர்பஸ் A321 (B-22603) தாய்பெய் சோங்சான் வானூர்தி நிலையத்திலிருந்து தாய்னான் வானூர்தி நிலையத்தை அடைந்து கீழிறங்கும் நேரத்தில் சரக்கு ஊர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. கீழிறங்கும் வானூர்தியைக் கவனிக்காது சரக்கு வண்டி விதி மீறி குறுக்கே வந்தது. பயணித்த 175 பேரும் காயமேதுமின்றி தப்பித்தனர்; சரக்கு வண்டியில் இருந்த இருவர் காயமுற்றனர். மிகவும் சேதமடைந்த வானூர்தி கைவிடப்பட்டது.[7]
  • சூலை 23, 2014இல் டிரான்சுஆசியா பறப்பு 222, ஏடிஆர்-72-500, கேயோசியுங்கிலிருந்து 58 பயணிகளுடன் மகோங் செல்கையில் பெங்கு தீவில் மகோங் வானூர்தி நிலையத்திற்கருகே விபத்திற்குள்ளானது. இதில் 47 பேர் உயிரிழந்தனர்; பிழைத்த 11 பேரில் குறைந்தது 7 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.[8]

மேற் சான்றுகள்[தொகு]

  1. "foot_01.gif பரணிடப்பட்டது 2015-02-06 at the வந்தவழி இயந்திரம்." (English) TransAsia Airways. Retrieved on March 2, 2014. "Address: No. 9, Sec. 1, Tiding Blvd., Neihu Dist., Taipei City 11494, Taiwan (R.O.C.)"
  2. "foot_01.gif பரணிடப்பட்டது 2015-02-05 at the வந்தவழி இயந்திரம்." (Chinese) TransAsia Airways. Retrieved on March 2, 2014. "公司地址: 北市內湖區堤頂大道一段9號"
  3. "foot_01.gif பரணிடப்பட்டது 2015-02-06 at the வந்தவழி இயந்திரம்." TransAsia Airways. Retrieved on January 7, 2011. "Address: 9F, No. 139, Cheng-Chou Rd., Taipei 103, R.O.C"
  4. "09-guestbook.aspx பரணிடப்பட்டது 2014-09-24 at the வந்தவழி இயந்திரம்." TransAsia Airways. Retrieved on January 7, 2011. "地址:台北市大同區103鄭州路139號9樓"
  5. "foot_01.gif பரணிடப்பட்டது 2015-02-05 at the வந்தவழி இயந்திரம்." TransAsia Airways. Retrieved on January 7, 2011. "台北市鄭州路139號9樓"
  6. "Aviation Safety Council-Occurrence Investigations". Asc.gov.tw. 2002-12-21. Archived from the original on 2014-07-26. பார்க்கப்பட்ட நாள் 2014-07-23.
  7. "ASN Aircraft accident Airbus A321-131 B-22603 Tainan Airport (TNN)". Aviation-safety.net. Archived from the original on 2012-03-15. பார்க்கப்பட்ட நாள் 2014-07-23.
  8. "Report: Plane crashes in Taiwan, killing 51 people"
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரான்சுஆசியா_ஏர்வேசு&oldid=3613501" இலிருந்து மீள்விக்கப்பட்டது