டால்பின் மூக்கு, குன்னூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டால்பின் முனையில் இருந்து பார்கும்போது உதகமண்டலம்.
டால்பின் முனையில் இருந்து கேத்தரின் அருவியின் தோற்றம்.

டால்பின் மூக்கு (Dolphin's Nose) என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தின், குன்னூரில் உள்ள ஒரு காட்சி முனை ஆகும். டால்பின் மூக்கு கடல் மட்டத்தில் இருந்து 1,000 அடிக்கு மேலான உயரம் கொண்டது. குன்னூரில் இருந்து 10 கிமீ தொலைவில் கண்கவரும் இடத்தில் உள்ளது.[1][2][3] இந்த உச்ச நுனி டால்பின் மூக்கு போல இருப்பதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. இது முற்றிலும் ஒரு தனிப்பட்ட பெரிய பாறையால் உருவாகியுள்ளது. இந்த டால்பின் மூக்கின் இடது மற்றும் வலது இரு பக்கத்திலும் இருந்து காணும்போது கிடைக்கின்ற காட்சிகள் மிகவிரிந்ததாக உள்ளது. இங்கிருந்து பார்க்கும்போது கேத்தரின் அருவி பல மீட்டர் உயரத்தில் இருந்து விழுவதை முழுமையான காணலாம்.[1][4][5] தேயிலைத் தோட்டங்களையும், வளைந்த சாலைகளையும் பார்க்க ஒரு சிறந்த இடமாக இது உள்ளது.[6][7]

சுற்றுலா தலம்[தொகு]

குன்னூரில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

இடம்[தொகு]

டால்பின் மூக்கு குன்னூரிலிருந்து 12 கிமீ தொலைவில் குன்னூரில் இருந்து கோத்தகிரி செல்லும் பாதையில் சென்றால் அதிலிருந்து வலதுபக்கமாக பிரியும் சாலையில் 11 கிமீ தொலைவில் டால்பின் மூக்கை அடைய முடியும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "See". coonoor.org. Archived from the original on 2011-10-06. பார்க்கப்பட்ட நாள் 2011-09-20.
  2. "Coonoor". himalayanquest.com. Archived from the original on 2011-09-18. பார்க்கப்பட்ட நாள் 2011-09-20.
  3. 3.0 3.1 "Coonoor". coonoor.org. Archived from the original on 2011-09-03. பார்க்கப்பட்ட நாள் 2011-09-20.
  4. "About Dolphins Nose". holidayiq.com. Archived from the original on 2011-08-12. பார்க்கப்பட்ட நாள் 2011-09-20.
  5. "Dolphin's Nose, Coonoor". mustseeindia.com. Archived from the original on 2011-10-08. பார்க்கப்பட்ட நாள் 2011-09-20.
  6. 6.0 6.1 "you are here - Home - South India - Tamil Nadu - Coonoor". visitindia.org.in. பார்க்கப்பட்ட நாள் 2011-09-20.
  7. "Report on a Trek to Dolphins Nose on 25 June 2011". brindavanschools.org. Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2011-09-20.